Header Ads



சாப்பிடும் போது செல்போன் பேசாதிருந்தால் 5 சதவீத தள்ளுபடி


அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஈவா என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் உரிமையாளர் மார்கோல்டு ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தங்களின் ஓட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் அவர்களது செல்போன்களை உடன் எடுத்து செல்லக்கூடாது. அதை ஓட்டல் ஊழியர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். அவ்வாறு செய்யும் வாடிக்கையாளர்கள் சாப்பிடும் உணவின் விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

செல்போனில் பேசிக் கொண்டே வாடிக்கையாளர்கள் சாப்பிடும்போது அருகில் உணவருந்துபவர்களுக்கும் அது இடையூறு ஏற்படுத்தும். மேலும் சிலர் தங்களது செல்போன்களின் மூலம் பல கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். அது மற்றவர்களின் நல்ல சிந்தனையை கெடுக்கிறது.

எனவே இதுபோன்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர் கோல்டு தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.