Header Ads



தனித்துப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் முடிவு சரியானதா..?

(இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இது)

கலைக்கப்பட்ட 3 மாகாண சபைகளுக்கான தேர்தல் பரபரப்பு தீவிரமடைந்திருக்கும் நிலையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமது கட்சி சின்னமான மரச் சின்னததில் தனித்துப் போட்டியிடப் போவதாக சிறிலங்கா முஸ்லிம் அறிவிப்புச் செய்துள்ளது.

வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கையர்களின் முழுக்கவனமும் கிழக்கு மாகாணத்தை நோக்கியே குவிந்துள்ளது. இந்தக் கவனக்குவிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடப் போகிறதா அல்லது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடப் போகிறதா என்று நிலவிய எதிர்பார்ப்பும் இந்த கிழக்கு மாகாணத்தை நோக்கி சகலரும் கவனக்குவிவை மேற்கொள்வதற்கு காரணமாக அமைந்தது.

இவ்வாறான ஒரு நிலையில்தான் எதிர்வரும் கிழக்கு மாகாண தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவிப்புச் செய்துள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்பான முறையிலேயே தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும், கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளது.

முன்னதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் உயர்பீடம் தீர்மானித்திருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 12 வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கு அரசாங்க உயர்வட்டாரம் முன்னதாக இணக்கமும் தெரிவித்திருந்தது.

அமைச்சர் அதாவுல்லா, அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான கட்சிகள் தமக்கும் அதிகரித்த இடம ஒதுக்கீடுகள் தரப்பட வேண்டுமென வலியுறுத்திய நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 10 வேட்பாளர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்தது. முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்குறுதி வழங்கியவாறு இட ஒதுக்கீட்டை அரசாங்கத்தினால் வழங்கமுடியாது போகவேதான் முஸ்லிம் காங்கிரஸுக்கு இடஒதுக்கீட்டில் வேட்டு விழுந்தது. இதனால் முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்றப்பட்டதாகவே உணர்ந்தது. இதனால் தனித்துப் போட்டியிடுவதை தவிரவும் முஸ்லிம் காங்கிரஸுக்கு மாற்று வழிகள் இருக்கவில்லை.

இதையடுத்தே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், தனித்துப் போட்டியிடும் முடிவை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ளது.

இதற்கிடையே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட எடுத்துள்ள முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் எடுத்துள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம். இறுதியாக ஏமாற்றப்படாமல், இப்போதே அவர்கள் புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வடக்கு, கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்துக்கு இந்த முடிவு சிறப்பாக அமையுமென நாம் நம்புகிறோம். தமிழ் பேசும் மக்களை மதிக்காத, அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத சிறிலங்கா அரசாங்கத்துக்கு துணைபோகாமல் இருப்பதென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம்' என்று கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்ததை அடுத்து கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆசாத் சாலியும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இணைந்து போட்டியிடலாமென எதிர்பார்க்கப்படுவதுடன், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சிலரும், கட்சியில் அதிருப்த்தியுற்றிருந்த மற்றும் சிலரும் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து போட்டியிடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ளமையால் முஸ்லிம் அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் போட்டியிடக்கூடாது என்பதே அப்பிரதேசங்களில் வாழும் அநேக முஸ்லிம்களின் விருப்பமாக இருந்தது. முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி, முள்ளாள் செனட்டர் மசூர் மௌலானா உள்ளிட்டவர்களின் விருப்பமும் இதுவாகத்தான் இருந்தது.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதில்லை, தனித்துநின்றே போட்டியிடுவது என முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டுள்ள இந்த பிந்திய தீர்மானம் அதன் ஆதரவாளர்களை நிச்சயம் திருப்த்திபடுத்தும் என நம்பலாம்.

இருந்தபோதும் தேர்தலுக்குப் பிறகு முஸ்லிம் காங்கிரஸுக்கு சவால்கள் காத்திருக்குமென்று ஊகிக்கப்படுகிறது. குறிப்பாக முஸ்லிம் முதலமைச்சரை வென்றெடுக்க வேண்டுமாயின் ஏதோவொரு கட்சியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்தாக வேண்டும். இதன்போது ஏனைய கட்சிகள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் தேவை முஸ்லிம் காங்கிரஸுக்கு உருவாகும்.

அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அரசாங்கத்தினால் விலை பேசப்படும் நிலையும் உள்ளது. இதனால் முஸ்லிம் காங்கிரஸின் பலம் குறையவும், பேரம்பேசும் சக்திக்கு ஆபத்து வரவும்கூடும். அத்துடன் மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டமையாலும், ஆட்சியமைக்கும் போதும் அரசாங்கத்தின் முழுமையான உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகளும் குறைவு எனலாம். இவ்வாறு பல சவால்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு தேர்தலின் பின்னரும் நீடிக்கும் நிலை காணப்படுகிறது.

இவ்வாறான சுழ்நிலைகளுக்கு மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட மேற்கொண்ட தீர்மானம் சரியானதா அல்லது பிழையானதா என்று நாம் அறிந்துகொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லையெனலாம்..!


6 comments:

  1. Basil Rajapaksha will buy some of the elected SLMC members and form government. Pillayan will be the CM against. All muslims MPCs will agree it as they did it last time.

    ReplyDelete
  2. கடந்த பொது தேர்தல் முடிவுகளை பத்திரிகை ஆசிர்யர்களும் ஆய்வாளர்களும் ஒரு முறை அலசின் கிழக்கில் கூட்டமைபோ முஸ்லிம் காங்கிரசோ ஆட்சியை பிடிக்கும் என அவாகொள்ளவும் மாடர் அரசு இந்த கட்சிகள் இல்லாமலையே ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளதை மறுக்கவும் மாடர் பொது தேர்தலை போன்றே இம்முறையும் அரசு அதே தொகை வாக்குகளை பெற்றால் தனிது ஆட்சி அமைபது நிச்சயம் பொது தேர்தல் முடிவுகளை பார்க்கhttp://www.slelections.gov.lk/parliamentary_elections/05.html

    ReplyDelete
  3. Fazlin Oru maatram eatpattula maathiri terikiradhu insha Allah konjam porumaiyaaga irunthutaan parppome..mosadi nadakkamal irunthaal...

    ReplyDelete
  4. முருங்கை காய்க்கு புடலங்காய் சரிவராது,
    இந்த தேர்தலை பொறுத்த மட்டில் கடந்த மாகாணசபை முடிவுகலைக்கூட ஒப்பிடமுடியாது அப்படியிருக்கும்போது எப்படி பொது தேர்தல் முடிவுகளை ஒப்பிடுவது,
    கடந்த முறை அரசாங்கம் எடுத்த வாக்குகலில் 70% மானவை தமிழ் கூட்டமைப்பிற்கு உரியது என்று எந்த அரசியல் ஆய்வாலர்கலுக்கு தெரியாமப்போனடதோ தெரியவில்லை,
    அப்படியானால் அவர்களுக்கு வேறு பெயர் உண்டு...
    கருதுக்கூறுபவர்கலள் அனைவரும் ஆய்வாளர்கள் என்றாகிவிடுமா....

    ஜனாதுபதியிடமே ஆதரவினை தருவதாக கூறிவிட்டு சமூகனலனில் குறைவு வரும்போது மறுக்கும் தைரியம் தலைவர் ஹகீமிற்கு மாத்திரமே உள்ளது...
    இதை முடிந்தால் அடுத்த முஸ்லிம் அமைச்சர்கள் செய்து காட்டட்டும்....

    ReplyDelete
  5. சரியாக சொன்னீர்கள் ulmamjath

    ReplyDelete
  6. Ulmamjath,என்ன கோமடி பன்றிகளா??? மாகாண சபை தேர்தல் நடந்தது 2008 இல் பொது தேர்தல் நடந்தது 2010 இல் எதனையும் ஒப்பிடுகையில் கடந்த எது கடைசியாக நடந்த தேர்தலோ அதனுடனேயே ஒப்பிட வேண்டும் நீங்க என்னடாவென்டா 2008 இல் நடந்த மாகாண சபை தேர்தலுடனேயே ஒப்பிட இயலாது 70% தமிழ் வாக்குகள் என எந்த ஆதாரமும் இல்லாமல் கூறிவிட்டு 2010 இல் அரசு தெளிவாக அங்கு பெற்றிருக்கும் வெற்றிகளை மறைக்க முயல்கிறீர்களே இதனால் உண்மை பொய்யாகிவிடுமா??? எனவே தமிழ் மக்களின் வாகுகள் இல்லாமலேயே 2010 பொது தேர்தலில் ஆளும் கட்சி கிழக்கின் மாவட்டங்களில் இரு மாவட்டங்களில் ஏனைய கட்சிகள் நெருங்க முடியாத அளவு வெற்றி பெற்றிருப்பதையும் மட்டகளப்பில் 4020 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ் கூட்டமைபை மிக நெருங்கி இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதையும் காணலாம்
    2010 பொது தேர்தலில் பிள்ளையனின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி அரசுடன் சேராமல் தனித்தே போட்டி இட்டு மட்ட்களப்பில் 16,000 வாக்குகளை பெற்றிருக்கிறது எனவே இந்த முறை அரசுடன் அந்த கட்சி சேர்வதால் மூன்று மாவட்டங்களிலுமே அரசு வெற்றி பெரும் வாய்ப்பு மிக அதிகம் தமிழ் கூட்டமைப்புக்கு தமிழர்களில் கனிசமானோர் வாக்களிப்பர்,முஸ்லிம்காங்கிரசுக்கு அவர்களில் செல்வாக்குள்ள முஸ்லிம் பிரதேச வாக்காளர்களே வாக்களிப்பர் ஆனால் அரசுக்கு தமிழ் சிங்கள முஸ்லிம் என மூன்று பிரதேச வாக்காளர்கள் இருபதால் திருமலையிலும் அம்பாரையிலும் அரசு வெறிபெறுவது வெள்ளிடை மலை மட்டகளப்பில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை வைதே வெற்றி வாய்பை கூற முடியும்

    கிழக்கின் அரசியல் தென் இலங்கையை விட வித்தியாசமானது அதுவும் முஸ்லிம் பிரதேசங்களின் அரசியல் அவர்களின் பிரதேசத்தில் அவர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட அவர்களின் மண்ணின் மைந்தர்கள் என்ன நிலைபாட்டை எடுக்கிறார்களோ அதட்கே அந்த அந்த பிரதேசத்தின் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருக்கும் அதல்லாமல் கொள்கை கோட்பாடு என்ற வெற்று கோஷங்களுக்கு பின்னால் வாக்களர்கள் இழுபடுவதில்லை

    ReplyDelete

Powered by Blogger.