Header Ads



சவூதி அரேபிய இளவரசரின் ஜனாஸா நல்லடக்கம் (வீடியோ)


சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் நயிப் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத்தின் ஜனாஸா நேற்று மக்கா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பிரதி அமைச்சரும் உள்துறை அமைச்சருமான நயிப் பின் அப்துல் விடுமுறை சுற்றுலாவுக்கும் மருத்துவ பரிசோதனையின் பொருட்டும் ஜெனீவா சென்றிருந்த வேளையில் தனது 78 ஆவது வயதில் அங்கு கடந்த சனிக்கிழமை மரணமடைந்தார்.

இவர் மன்னர் அப்துல்ஹஸீஸின் 23 ஆம் மகனாவார்.  தற்போது அடுத்த முடிக்குரிய இளவரசராக நாயிப்பின் 76 வயது சகோதரான இளவரசர் சல்மான் விளங்குகிறார்.
 
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் ஆகிய உலகத் தலைவர்கள் இளவரசரின் மரணத்துக்கு அனுதாபத்தை தெரிவித்துள்ளனர். டேவிட் கெமரூன் தனது அனுதாபச் செய்தியில் இளவரசரின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.  பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இளவரசரின் வகிபாகம் குறித்து பராக் ஒபாமா தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


 

No comments

Powered by Blogger.