சுவிஸ்சர்லாந்தின் முதலாவது சூரியசக்தி விமானத்தை பார்க்க துடிக்கும் மொராக்கோ மன்னர்
சூரிய சக்தியால் இயங்கக்கூடிய விமானம் பரிசோதனை ரீதியாக வியாழக்கிழமை சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து பயணத்தை துவக்கியது.
சூரிய சக்தியால் முழுக்க முழுக்க இயங்கும் விமானம், சுவிட்சர்லாந்து நாட்டின் பேயர்னி பகுதியிலிருந்து வியாழக்கிழமை பயணத்தை துவக்கியது. ஆன்ரி போர்ஷ்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகியோர் இந்த விமானத்தை ஸ்பெயின், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஓட்டிச் செல்கின்றனர். ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் வெள்ளிக்கிழமை தரையிறங்கும் இந்த விமானம்.
70 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட உள்ளது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டைப் பிரிக்கும் பைரனீஸ் மலைகளைக் கடந்து செல்லும் இந்த விமானத்தின் இறக்கை, 63 மீட்டர் நீளமுடையது. இறக்கை முழுவதும் சூரிய ஒளியை கிரகிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மொராக்கோ மன்னர் முகமதுவின் அழைப்பின் பேரில் இந்த விமானம் மொராக்கோ நாட்டின் ரபாத் நகருக்கு செல்ல உள்ளது. உலகில் அதிக அளவில் சூரிய மின்சக்தியை மொராக்கோ நாடு உற்பத்தி செய்கிறது. சூரிய மின் உற்பத்தி மையங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் செயல்படுகின்றன

மன்னரின் இறுதி ஆசையை நிறைவேற்றி பூர்வ ஜென்ம பலனை தேடிக் கொள்ளுங்கள்.வெள்ளி ஜும்மாவுக்கு பின் என்றால் மன்னர் பள்ளிக்குப் போயிருப்பார் .ஜும்மாவுக்கு முன் என்றால் ?
ReplyDeleteMeraan