Header Ads



பள்ளிவாசல் உடைப்புக்கு எதிராக குரல் எழுப்பி விட்டால் புனிதராக முடியாது..!


முசலியூர் கே.சி.எம். அஸ்ஹர்

அண்மைக்காலமாக பத்திரிகைகளிலும் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் இணையத் தளங்களிலும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களை அவமதிக்கும் வகையிலான செய்திகளை ஆயர் அவர்களும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ, செல்வம் போன்றோரும் வெளியிட்டு வருகின்றனர். இச்செய்திகளை அமைச்சருக்கு எதிரான செய்தியாக நாம் பார்க்கவில்லை. புலிகளால் இனச்சுத்திகரிப்பின் மூலம் வெளியேற்றப்பட்ட சிறுபாண்மை முஸ்லிம் இனத்தைச்சேர்ந்த ஒரு இலட்சம் மக்களுக்கும் எதிரான கருத்தாகவே நாம் பார்க்கிறோம்.

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இனிமேல் ஒருபோதும் மீளத்திரும்பமாட்டார்கள் என்றே சிலர் நினைத்திருந்தனர். அவர்களை விட்டுவிட்டு தாம் நினைத்த விதமாக அரசகாணிகளை ஆலயங்களுக்கும், கோயில்களுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளித்ததை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். கொக்குப்படையான், சவேரியார் புரம் போன்ற இடங்களில் திட்டமிட்ட குடியேற்ற நிகழ்வு நடைபெற்றுள்ளதை நியாயமாகச் சிந்திக்கும் அப்பகுதி தமிழ்மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை.

எம்பிக்களான செல்வமும், வினோவும் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் றிசாட் அமைச்சரானார் என அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளனர். முஸ்லிம் ஒருவருக்கு வாக்களிக்கும் மனோ நிலை தமிழர்களிடம் இருந்ததுமில்லை. இருக்கப்போவதுமில்லை. 100 & முஸ்லிம்களின் வாக்காலேயே றிசாட் அமைச்சரானார். இது தெரியாமல் பொறாமையால் கண்டபடி அறிக்கை விடுவது சிறு பிள்ளைத்தனமானது.

தமிழ் கூட்டமைப்புக்குள் இருக்கும் விஷப்பாம்புகளாகவே இவர்களை நாம் பார்க்கிறோம். விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களினை 22 வருடங்களுக்குள் என்றாவது ஒருநாள் தமிழ் கூட்டமைப்பு எம்பிமார் பார்க்க வந்துள்ளனரா? எம்மால் வஞ்சிக்கப்பட்ட சமூகம் என்று பிராயச்சித்தமாக ஏதாவது உதவி செய்துள்ளனரா?

புறாவுக்கு சதையையும், முல்லைக்குத்தேரும், மயிலுக்குப் போர்வையும் கொடுத்தது எம் சமூகமே என புராணம் படிப்பதிலும் இராமன், மனுநீதிச் சோழன் பற்றிப் புகழ்பாடுவதிலும் என்ன நியாயம் இருக்கிறது.

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பின்பு அனைத்து வளங்களையும், பல்கலைக்கழக கோட்டாக்களையும், அரச தொழில்களையும், நிவாரணங்களையும், அரச காணிகளையும் பெற்று சுகமாக வாழ்ந்தோர் நீங்கள்தானே.

வன்னி யுத்தத்தில் வாழ்விழந்து வவுனியா முகாம்களில் வதைபட்ட உங்கள் இனத்திற்கு எம் அமைச்சர் புனர்வாழ்வு அமைச்சு மூலம் செய்த அத்தனை உதவிகளையும் அடியோடே மறந்துவிட்டீர்களே! 

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு||

எம் இன அமைச்சர்கள்கூட எம்மக்களின் விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே நடந்துள்ளனர். உதாரணம்: முன்னாள் அமைச்சர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள்கூட ஆயிரக்கணக்கில் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு வழங்கியபோது எம்மின மக்களுக்கு எத்தனை வேலை வாய்ப்பு வழக்கினார்..?

இப்படியான பின்னணியில்தான் அல்லாஹ் அமைச்சர் றிசாட் அவர்களை எம்சமூகத்திற்கு அருட்கொடையாகத் தந்துள்ளான். 22 வருடங்களாக நாம் இழந்தவைகளை அவர் மூலமாக பெறும்போது துவேசப்பேச்சுக்களும், அறிக்கைகளும் வெளிவருகின்றன. காணிகள், வீடுகள், அரச பதவிகள், நிவாரணங்கள் ஏனைய உதவிகளை அமைச்சர் செய்யும்போது நீங்கள் ஏன் துள்ளிக்குதிக்கிறீர்கள். இப்படியான நிலையில் காணியும் பொலிஸ் அதிகாரமும் உங்கள் கையில் கிடைத்து விட்டால் அரை மணிநேரத்தில் முஸ்லிம்களை வெளியேற்றி விடுவீர்கள் போலிருக்கிறது.

தம்புள்ள பள்ளி உடைப்புக்கு எதிராக குரல் எழுப்பி விட்டால் மட்டும் நீங்கள் புனிதராக முடியாது. உங்களால் உடைக்கப்பட்ட (சமூகத்தால்) எம் பள்ளிகளின் படங்கள் இங்கே உள்ளன. அவற்றிற்கு முதலில் விடை சொல்லுங்கள்.

அரச காணிகளை யாரும் பிடித்தால் அதனை காணி அமைச்சு, அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள், பொலிஸார், நீதிமன்றம் போன்றோர் பார்த்துக் கொள்வர். இதற்குள் ஏன் மதிப்புக்குரிய ஆயரவர்கள் தலையிட வேண்டும். அரச நிருவாக இயந்திரம் அதனைப் பார்த்துக் கொள்ளும்.

ஆயரிடம் சில கேள்விகள்.

* ஒரு முஸ்லிம் அமைச்சர் என்பதாலா சாபம் விடுகிறீர்கள்.
 (ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதி நிதி)

* புனித சவேரியாரின் வருகைக்கு முன்பே எம் அரேபியர்களின் வருகை மன்னாரிலிருந்தது என்பதை அறிவீர்களா?

* எம்மக்கள் வெளியேற்றப்பட்ட போது அது பிழையெனக் கூறி ஏன்? நீங்கள் தடுக்க முன்வரவில்லை.

* எமது இறை இல்லங்கள் உடைக்கப்பட்டதை நீங்கள் ஏன்? தடுக்கவில்லை.
எ முசலிப்பிரதேச வீடுகள் யாவும் உடைக்கப்பட்டு கதவு, நிலை, மரங்கள், ஓடுகள், கற்கள் என்பன வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு விற்கப்பட்டதையும் மாவீரர் குடும்பங்களுக்காக மடுப்பிரதேசத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதையும் அறிவீர்களா?

* எம் பிரதேச மக்களின் ஆயிரக்கணக்கான ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் என்ன நடந்தது? யார் உடமையாக்ககிக் கொண்டனர்.

* நீங்கள் வைத்துள்ள சர்வமத அமைப்பு என்பது வெறும் லேபலா?

யார் என்னசொன்னாலும் உங்களின் பைபிளின் பழைய ஏற்பாட்டிற்கும் முஸ்லிம்களுக்கும் இருக்கும் தொடர்பை நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள் என நான் நம்புகிறேன். நீங்கள் ஆமென் என்கிறீர்கள். நாம் ஆமீன் என்கிறோம். முதல் மனிதனை நாம் ஆதம் எனக் கூற, நீங்கள் ஆதாம் என்கிறீர்கள். இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து இறைவனின் தண்டனைக்கு பயந்து ஒன்றுபடுவோமாக...!






8 comments:

  1. யாரப்பா புனிதர்?

    ஏசுவே புனிதர் அல்ல என்று பைபிள் சொல்லுது!

    ReplyDelete
  2. நன்றாகக் கேட்டுள்ளீர்கள் அஸ்ஹர்! ஆயர் அவர்களின் அடாவடித்தனங்களை மன்னாரில் உள்ள கிறிஸ்தவ மதத்தில் உள்ள கத்தோலிக்கரல்லாதவர்களைக் கேட்டால் எம்மை விட இன்னும் அதிகமாகச் சொல்வார்கள், எத்தனை கத்தோலிக்கரல்லாதவர்களின் வீடுகள் எரித்து நாசம் செய்யப்பட்டன என்றும் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன என்பதையும் அவர்கள் முழுமையான தரவுகளுடன் கூறுவார்கள், ஆயர் அவர்கள் இவற்றை தன்னிச்சையாக செய்யவில்லை மாறாக மேலிடத்தின் வழிகாட்டலுடந்தான் மேற்கொள்கின்றார்.குறிப்பாக இந்தியத் திருச்சபை மற்றும் சில மேலைநாடுகளின் திருச்சபைகளும் இதன் பின்னனியில் இருக்கின்றன என்பதை நாம் அறியவேண்டும், கடந்த சில தினங்களாக மன்னாரில் உள்ள அனைத்து மதத் தலைவர்களையும் கூட்டணி அமைத்து முஸ்லிம்களையும் அழைத்து அமைச்சர் ரிசாத்திற்கு எதிராக செயற்பட நிர்ப்பந்தித்துள்ளார்கள் என்ற செய்தியும் இங்கு இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.
    என்ன நடந்தாலும் றிசாத் அமைச்சரை நாம் விட்டுக்கொடுக்க முடியாது, ஆயரின் கருத்துகளுக்கும் விமர்சனங்களுக்கும், மக்களை பிழையாக வழிநடாத்துவதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடமாகாணம் தழுவிய ரீதியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றினை நாம் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இவர்களின் கொட்டம் அடங்கும்.
    அப்துல் நாஸர்- முசலி

    ReplyDelete
  3. //உங்கள் சமூகத்தால் உடைக்கப்பட்ட எம் பள்ளிகளின் படங்கள் இங்கே உள்ளன. அவற்றுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்//

    Rishadh Aboothalib M.

    ReplyDelete
  4. உண்மை30/05/2012, 08:51

    கட்டுரையாளர் கூறும் அதே மருத்துவ வசதிகள், பல்கலைக்கழக கோட்டா ,....இன்னும் எத்தனையோ வளங்களை புத்தளம் உள்ளூர் மக்களிடம், இடம்பெயர்ந்து வந்து சுமார் 22 வருடங்கள் தஞ்சம் புகுந்து வாழ்ந்த இந்த வடபுல மக்கள் பங்கு போட்டுள்ளனர்.அதற்காக புத்தளதிட்கு வரும் கோட்டாவை கூட்டி கேட்டு ஒரு முறையாவது உங்களது அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசி இருப்பாரா?? இப்போது இந்த அறிவு எங்கிருந்து வந்தது?? பொதுனலத்துடன் இடம்பெயர்ந்தோருக்கு வரும் உதவிகளில் உள்ளூர் மக்களுக்கும் 33.33% கொடுக்க வேண்டும்(According to UN mandate)எனக்கூறிய மர்ஹூம் அஷ்ரப் அவர்களையே நீர் குறை காண்கிறீர்???!!!:P

    உங்களிடம் (ரிஷாத் கூட்டணியிடம்) உள்ள எகூதிய பண்பு என்னவென்றால்; வரும் உதவிகளும், நலன்களும் மன்னார் இடம்பெயர்ந்த மக்களுக்கு...ஆனால் வரும் பிரச்சினைகளில் மட்டும் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் பலிக்கடவாக்கி அரசியல் செய்ய முனைவீர்கள்..
    "அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள் !! இவ்வுலக வாழ்வு வெறும் வேடிக்கையும், விளையாட்டும் ஆகும்" - அல்குரான் !

    ReplyDelete
  5. INTHA KARURAIYIL MAHOOM MHM ASHRAF PARRIYA SEITHI MIKAWUM MOSAMAANATHU. AWAR MUSLIM SAMUKATHTHUKKU SEITHA SEWAIKAL ALAPPERIYATHU. MUSLIM CONGRESS I PILAWUPADUTHTHU THANNALATHTHI WENRA SEILA THALAIWARKALUM IRUKKATHTHAAN SEIHIRAARKAL.

    ReplyDelete
  6. hello brothers whatever they said allah never betray Muslim, keep your eeman in pure every thing will come success, Ayar does not know the history ask him to go the primary school to learn abcd.

    ReplyDelete
  7. 90kalil vadapulavaliparkal tholil inry akathi mukamil allal pattathai arinthavanukkuthan ipperachinai purium

    ReplyDelete
  8. அமைச்சரை புனிதராக சித்தரிக்கும் கட்டுரை. அவருடைய சொந்த பிரச்சினையை அரசியலாக்கிவிட்டார் என்பது தான் உண்மை. ஏனெனில் இடம் பெயர்ந்தோரில் சுமார் 70% மானோர் மீளக் குடியேறமாட்டார்கள் என்பதுவே உண்மை. இதில் எங்கிருந்து 100,000 பேரை குடியேற்றப் போகிறார்?

    ReplyDelete

Powered by Blogger.