Header Ads



1976 புத்தள கலவரமும், வபாத்தான நமது மூதாதையர்களும்..!


இஷாம் மரிக்கார்

அன்றைய நாள் இரண்டாம் மாதம் இரண்டாம் திகதி நடந்த கலவரம் எப்படி தோற்றம் பெற்றது என்ற கேள்வி பலரது மனதில் இல்லாவிட்டாலும், அதனை தெரிந்து கொள்ளவேண்டும் என்கின்ற ஒரு ஆசை எல்லோர் மனதிலும் இருந்துவருகிறது.

ஒரு வெள்ளிக்கிழமை வழமையைப்போல பெரியபள்ளியின் முன்னாள் உள்ள மன்னார் பாதை மல்ஹர்ஸ் கடைக்கு முன்னாலும் பெரிய பள்ளியின் முன்வாசலுக்கு முன்னாலும் கருப்பு பலகை வைத்து தொழுகைக்காக மூடப்படுகிறது. அன்றைய வழக்கம் வீதியை மூடி தொழுகைக்கு முன்னாள் உரைநிகழ்த்தி தொழுவது.

இதன் போது மன்னார் வீதியில் வந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் (மெல்லு , கருணாரத்ன என்கின்றன SA இருவரும்) அந்த கருப்பு பலகையை தூக்கி சற்று விளக்கி வைத்துவிட்டு முஸ்லிம்களால் மறைத்துவைக்கப்பட்டிருந்த மன்னர் வீதியில் சென்றார்கள். சென்ற பின்னர், தொழுகை முடிந்து வந்த மக்கள் மத்தியில் கேள்விகள் குமிந்தன.

யார் செய்தது? ஏன் செய்தார்கள்? என்ன தைரியம் அவர்களுக்கு? நாம் என்ன கோழைகளா? என்னவென்று ஒரு கேள்வி கேட்கவேண்டும்? என்ன வென்று ஒரு கை பார்த்தாலும் பருவா இல்லை? என பல கேள்விகள் குமிந்த வெளிப்பாடே அனைத்து முஸ்லிம்களும் பழைய போலீஸ் நிலையத்திற்கு அதாவது புதிய பஸ் நிலையத்துக்கு முன்னாள்  இருந்த போலீஸ் நிலையம் நோக்கி சில தைரியமிக்க புரட்சி வார்த்தை பேசக்கூடிய டாக்டர் இலியாஸ், ஆசிரியர் சபருள்ள, தடியன் வகாப் என்று கூறப்படும் நபர்களின் தலைமையில் வழிநடாத்தப்பட்டு போலீஸ் நிலையத்தை நோக்கி சென்று அங்கு இருந்த போலீஸ் நிலைய வாசலை கூட உடைக்க முற்பட்டபோது , போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ் காரர்கள் துப்பாக்கியை ஏந்தியவாறு நம் மக்கள் முன்னாள் அணிவகுத்தார்கள். அந்த நேரத்தில் உடனடியாக அன்றைய நகர பிதா இபுன் அவர்கள் போலீஸ் நிலைய மதிலை பாய்ந்து போலீசோடு ஒரு பேச்சுவார்த்தை  செய்தார்கள்.

ஆனால் அதன் பின்னர் மக்கள் அனைவரும் பெரிய பள்ளியின் முன் வந்து நின்று மன்னார் வீதியில் பயணிக்கும் பஸ், டிப்பர் போன்ற வாகனத்திற்கு கல்லால் அடித்து நாசப்படுத்தினார்கள் அப்பொழுது கொழும்பு போலீஸ் உயர் பதவியில் இருந்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி கபூர் அவர்கள் வந்து பெரியபள்ளியின் முன்னாள் கூறினார்கள் "அல்லாஹுக்காக நீங்கள் எல்லாம் பள்ளி உள்ளே செல்லுங்கள், பாரதூரமான விளைவுகள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறது" என்று கூறினார்.

அப்போது போலீஸ் அதிகாரிக்கு முன் ஆசிரியர் சபுருல்லாஹ் அவர்கள் கூறினார் "உங்களுடைய கோட்டை கலட்டி விட்டு நீங்கள் செல்லுங்கள்" என்றார். அதற்கு கபூர் அளித்த பதில் "உங்களை அல்லாஹ் காப்பத்தட்டும்" சொல்லி அரை மணி நேரம் கூட முடியவில்லை , எங்கிருந்தோ போலீஸ் வாகனம் மூலம் வந்த போலீஸ் அதிகாரிகள் பள்ளியை சுற்றிவலைத்தார்கள். அப்போது பள்ளிக்கு உள்ளே அனைவரும் சென்று தரையோடு ஒட்டிக்கொண்டார்கள் (படுத்தவாறு), அப்போது ஒரு சிலர் பள்ளிக்குள் நடந்து உலாவிய போது போலீஸ் அதிகாரிகளுக்கு விளங்கிய நிழல்கள் மூலமே அவர்கள் 11   பேரும் குறிவைக்கப்பட்டு பள்ளியினுள் ஷஹீத் ஆனார்கள். (இன்ன லில்லஹி வஇன்ன இலிஹி ராஜிஊன்)

அன்று தான் நமது ஊற்றின் வரலாற்றில் பெரிய ஒரு கருப்பு புள்ளியாய் இருந்துவரும் 76 ஆம் ஆண்டு கலவரம் நிகழ்ந்து முடிந்தது. இதில் இருந்து அழகான ஒரு படிப்பினைகளை நாம் படித்துக்கொள்வோம். இனியாவது பெரியபள்ளியின் பெயரை முற்படுத்தி தேவை இல்லாத விடயத்துக்கு ஆற்பாட்டம் செய்து அல்லது தனது சுய இலாபத்திற்காக பெரியபள்ளியை முன்வைத்து ஆட்பாட்டமோ அல்லது ஏதாவது எதிர்ப்பு நடவடிக்கையோ செய்வதில் இருந்து விலகி நிற்போம். பெரிய பள்ளி நமது ஊரின் தலைமை அதை ஒரு அரசாங்கத்துக்கு எதிரான பார்வைகொடுத்து மாற்றிவிட வேண்டாம். தற்போதைய காலம் இனவாதங்களை தூண்டக்கூடிய காலமாக கணிக்கப்பட்டுவருகிறது. சிந்திப்போம் செயலாற்றுவோம் ஒன்றுமைப்படுவோம்.

நன்றி வஸ்ஸலாம்

6 comments:

  1. சில முஸ்லிம்களின் அவசரம் தூரநோக்கு இல்லாத பார்வை இந்த நிகழ்வை படம் பிடித்து காட்டுகிறது இந்த நிலைமை தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று எங்கள் முஸ்லிம் புத்தி ஜீவிகள் சமுகத்துக்கு தகுந்த ஆலோசனை வருங்கலத்தில் வழங்க வேண்டும் இல்லை என்றால் ஒரு சமுகமே அடிமை நிலைக்கு தள்ளப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ் துவா செய்வோம் அந்நியர்களின் சூழ்ச்சியை விட்டும் பதுகப்பயாக என்று ஒவ்வொரு தொளுகைளும் கேட்போம் ஆமீன்
    riyas

    ReplyDelete
  2. உணர்ச்சி வசப்பட்டத்தின் விளைவு 11 அப்பாவிகளின் உயிர் குடிப்பில் முடிந்திருக்கிறது.இன்றுதான் எங்களைப் போன்றவர்களுக்கு உண்மை தெரிந்திருக்கிறது.அந்த நேரத்தில் தான் இலங்கையில் உச்சி மாநாடு நடந்தது.அதற்கு வந்த கடாபி முஸ்லீம்கள் விரும்பினால் லிபியா வந்து குடியேறலாம் என்று சொன்னதாக கதையொன்று உண்டு ,உண்மையா?
    Meraan

    ReplyDelete
  3. இது ஒரு நாளில் நடந்து முடிந்த விடயமல்ல. சில நாட்களாகவே இரு சமூகத்தை சேர்ந்த சகோதரர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றி இருந்தது, இறுதியாக பெரியபள்ளி விடயத்தில் இது உச்ச கட்டத்தை அடைந்தது...இதில் வபாத்தானவர்கள் 11 என குறிப்பிடப் பட்டுள்ளது. இது சம்பந்தமாக ISHAAM சரியான தகவல்களை பெற்று பிரசுரிக்குமாறு வேண்டுகிறேன். உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன். தகவல் சரியாக இருந்தால் தான் இதன் உண்மை தன்மை மக்களுக்கு புரியும். இனியும் இப்படியான இனங்களுக்கிடையான பிரச்சனைகள் நடை பெறாமல் நாம் நம்மூரை பாதுகாக்க வேண்டும் . எல்லாவற்றுக்கும் இறைவன் துணை..............

    ReplyDelete
  4. மரணித்த அப்பாவிகளுக்காகவும்,குடும்பத்துகாகவும் துஆ செய்வோம்.தனிப்பட்ட ஒருசிலரின் வீரத்துக்கு
    11 பேர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள் என நினைக்கும் போது மனக்கவலை தான் மிஞ்சுகிறது
    Daoud Tharik

    ReplyDelete
  5. எதையும் உணர்ச்சிகளால் பார்த்து முடிவு செய்வது ஆபத்தானது.அறிவுபூர்வமாகப் பார்த்து சிந்தித்துச் செயற்படுவதே பயனுள்ளதாக அமையும்.இது வரலாற்றுப் பாடம்.

    ReplyDelete
  6. கருப்பு பலகை கொண்டு பாதை மூடப்பட்டுள்ளது .பொலிஸார் அதை அகற்றி சென்றுள்ளனர் .அவர்கள் வேண்டும் என்று சென்றார்களா ? இல்லை ஏன் பாதை மூடப்படவேண்டும் ? பாதை மூடிதான் தொழுகை நடத்த வேண்டுமா ? இது தேவை இல்லாத அவசர புத்தியால் வந்த வினை .இஸ்லாம் அடுத்தவர்களுக்கு இடையூறு கொடுக்க சொல்லவில்லை .ஒரு சில சொற்ப முஸ்லிம்கள் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று சிந்திபதில்லை .
    மாற்று மதத்தினர் நம்மை பார்த்தால் இஸ்லாம் தெளிவான ஒரு மார்க்கம் என்று நம் அழகான செயல்களின் மூலம் காட்ட வேண்டும் .

    ReplyDelete

Powered by Blogger.