Header Ads



யாழ்ப்பாண மீள்குடியேற்றம் குறித்து ஆராய்வு - முஸ்லிம்கள்..? (படம்)

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களது தேவைகள் குறைபாடுகள் மற்றும் நிவாரண வழங்கல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆய்வு ரீதியிலான கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை 16 ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது இன்னமும் மீளக் குடியேற்றம் மேற்கொள்ளப்படாத பகுதிகள் குறித்தும் பாவனைக்கு விடப்படாத தனியார் மற்றும் பொதுக் கட்டிடங்கள் வீடுகள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வழங்கப்படாதிருக்கும் நிவாரணங்கள் தொடர்பிலும் கவனஞ் செலுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் யாழ் மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேவேளை இக்கலந்துரையாடலின் போது யாழ் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி எவரும் கலந்துகொள்ளவில்லையென அறியவருகிறது. 1990 இல் புலிகளின் பலாத்கார வெளியேற்றத்திற்கு உட்பட்ட பல ஆயிரம் முஸ்லிம்கள் தொடர்ந்தும் வெளியிடங்களில் வாழ்ந்துவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.




1 comment:

  1. யாழ் முஸ்லிம் மக்களை பிரதிநித்துவப்படுத்தி யாரும் கலந்து கொள்ளவில்லை என்றால் கூட்டத்தில் என்ன பயன்?
    இப்படியான கூட்டம் மணமக்கள் இல்லாத திருமண வீடு போன்றது.

    அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் மவ்லவி சுபியான் அவர்களுக்கு இது பற்றி தெரியாதா?

    தலைமைத்துவத்துக்கும், பதவிகளுக்கும் சுறுசுறுப்படையும் கிளிநொச்சி யாழ்ப்பாண முஸ்லிம் சம்மேளனம் எங்கே போனது?

    முஸ்லிம்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் காரணம் என்ன?
    அழைக்கப்படவில்லையா? புறக்கணிக்கப்பட்டார்களா? அல்லது போடு போக்காக இருந்துவிட்டர்களா?

    இவற்றுக்கு என்ன பதில்?????

    யாழ்ப்பாணத்து முஸ்லீம்களின் குரலான யாழ் முஸ்லிம் இணையம் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, சம்மேளன தலைவர், காரியதரிசி, மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோரை இது விடயத்தில் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துக்களை பெற்று பிரசுரிக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான விடயம். மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்களில் கோட்டை விடுவது, அனைத்தையும் கோட்டை விடுவதற்குச் சமன்.

    ReplyDelete

Powered by Blogger.