இது விற்பனைக்கு அல்ல..!
யாழ் முஸ்லிம் வலைத்தளமானது எப்போதும் மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து வரும் ஒரு ஊடகம். ஆரோக்கியமான கருத்துப் பகிர்வுகள் சீர்திருத்தத்திற்கு உதவுமென்பதும் எமது நம்பிக்கை.
இருந்தபோதும் சிலர் கருத்து தெரிவிக்கவுள்ள உரிமையை துஷ்பிரயோகம் செய்கின்றனரோ என சிந்திக்கத் தோன்றுகிறது. இவற்றுக்கப்பால் சிலர் முஸ்லிம் சமூகம் என்ற எல்லைகடந்து இயக்க நலன் மற்றும் தனிப்பட்ட தமது நலன் என்ற நிலைப்பாட்டிலிருந்து சிந்திக்கும்போதே இவ்வாறான கருத்தியல் துஷ்பிரயோகங்கள் பாவிக்கப்படுவதுடன், அதுவே சமூக ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படுத்திவிடுகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே நாம் சில கருத்துக்களை அல்லது தகவல்களை பதிவேற்றம் செய்கின்றமோதவிர அவை குறித்து முஸ்லிம் சகோதரர்கள் சண்டைபிடிப்பதற்கு அல்ல. கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்துவதும் எமது நோக்கமல்ல.
இஸ்லாமிய இயக்கச் செயற்பாட்டாளர்களின் சில செயற்பாடுகள் காரணமாகத்தான் புனித இஸ்லாம் குறித்தும் முஸ்லிம் உம்மா பற்றியும் மாற்றுமத சகோதரர்களிடம் தவறான அபிப்பிராயங்கள் உண்டாகின்றன என்பது எமது அதீத நம்பிக்கையுமாகும்.
கருத்துக்களை எழுதும் அல்லது பதிவிடுவதற்கு உள்ள உரிமையை பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்திற்கு எத்தகையை சேதங்களையும் ஏற்படுத்தி விடாதீர்களென எப்போதும் ஒற்றுமையை விரும்பும் யாழ் முஸ்லிம் வலைத்தளம் இஸ்லாமிய இயக்கச் செய்றபாட்டாளர்களுக்கு அன்புக் கட்டளை பிறப்பிக்கிறது. மாற்றுமத சகோதரர்கள் அதிகமாக பார்வையிடும் செய்தி தளங்கள் வரிசையில் யாழ் முஸ்லிம் வலைத்தளமும் பிரதான பங்கு வகிப்பதை நாம் அறிந்துவைத்துள்ளோம்.
எனவே யாழ் முஸ்லிம் வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிடும் சகோதரர்கள் மிகநிதானமாகவும், அதேவேளை சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையிலும், மாற்றுமத சகோதரர்களிடம் எம்சமூகம் பற்றிய தவறான அபிப்பிராயங்கள் ஏற்படாதவகையிலும் செயற்படுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இங்கு
யாழ் முஸ்லிம் வலைத்தளம்

Post a Comment