ஐந்து மாதக் குழந்தை செய்த பாவமென்ன..? இலங்கையில் சம்பவம்
ஐந்து மாதக்குழந்தை ஒன்று கிணற்றில் வீழ்ந்து மரணமான சம்பவத்தில் அந்தக் குழந்தையின் தந்தையை சந்தேகத்தின் பேரில் வாரியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்தச் சம்பவத்தில் விசாரணைகளை மேற் கொண்ட வாரியபொல பொலிஸார் தெரிவித்தவை வருமாறு:
குழந்தையின் தாய் முதலில் கிணற்றுக்குள் குதித்துள்ளார். அதனைத் தொடர்ந்து குழந்தையை அரவணைத்துக் கொண்ட தந்தையும் குதித்தார். தாயும் தந்தையும் ஒருவாறு உயிரைக் காப்பாற்றிக் கொண்டபோதும் குழந்தை மூழ்கி இறந்துவிட்டது.
இவர்கள் இருவரும் கிணற்றுக்குள் குதித்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக வாரியபொல பொலிஸார் கூறினர்.

Post a Comment