Header Ads



சரியா..? தவறா..??

பிலிப்பைன்ஸிற்கு யானை குட்டியொன்றை தானம் செய்ய இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை உடன் இடைநிறுத்துமாறு சர்வதேச விலங்கு உரிமைகள் குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் இந்த தீர்மானமானது விலங்குகளுக்கு வழங்கும் வாழ்நாள் தண்டனை போன்றது என அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 50 ஆண்டு கால இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவென மார்க் மணிலாவில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு அனாதை இல்லத்தில் இருந்து ஒரு யானை குட்டியை தானம் செய்யவுள்ளதாக இலங்கை அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில் மணிலாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய விலங்குகள் பராமரிப்பு குழு விலங்குகள் பரிமாற்றத்தை தடுக்குமாறு இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரட்னவுக்கு இன்று வெள்ளிக்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை யானை அன்பளிப்பு செய்யவுள்ள உயிரியல் பூங்கா சமீபத்தில் பொதுவுடமையாக்கப்பட்டதாகவும் அங்கு வலுவான வசதிகள் இல்லை எனவும் தனது கடிதத்தில் கூறியுள்ள சர்வதேச விலங்கு உரிமைகள் குழு யானை அன்பளிப்பு செய்யும் முடிவு நிச்சயமாக இலங்கைக்கு மோசமான பிரதிபலிப்பை கொடுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.