யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு திருமணம் நடந்தது
திருமண வைபவம் முடியும் வரை மணமகனின் உறவினர்களால் மணமகனின் காதலியை வீட்டு அறையினுள் பூட்டி வைத்த சம்பவம் ஒன்று யாழ் - வடமராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்த மணமகனும் யுவதியும் ஒருவரை ஒருவர் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மணமகனுக்கு வீட்டார் வேறொரு பெண்ணை நிச்சயம் செய்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருமணம் இடம்பெறவிருந்தது.
இதனை அறிந்த மணமகனின் காதலி குறித்த மணமகளின் வீட்டிற்கு சென்று தனது காதல் விடயத்தை கூறமுற்பட்ட வேளை மணமகனின் உறவினர்கள் அப்பெண்ணை இழுத்துச்சென்று கட்டிய பின்னர் அறையினுள் பூட்டி வைத்துள்ளனர். பின்னர் திருமணம் முடிந்ததும் அப்பெண்ணை கட்டை அவிழ்த்த பின்னர் எச்சரிக்கை செய்து பின்னர் வீடு செல்லூமாறு பணித்தனர்.
Post a Comment