கடாபியின் மகன் நைகருக்கு தப்பியோட்டம்
லிபியாவில் 42 ஆண்டுகள் நடந்த அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்ந்தது. அதை தொடர்ந்து அவரது மனைவி, மகள் மற்றும் 2 மகன்கள் குடும்பத்துடன் பக்கத்து நாடான நைஜருக்கு தப்பி விட்டனர். அங்கு அவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் கடாபி தலை மறைவாக இருக்கிறார் அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை.
அவரை புரட்சி படையினர் தேடி வருகின்றனர். அவரது 3-வது மகன் ஷாதி கடாபி ராணுவத்துக்கு தலைமை தாங்கி புரட்சி படையுடன் சண்டையிட்டு வந்தார். ரத்தம் சிந்துவதை தடுக்க தான் சரண் அடைய தயார் என கடந்த மாதம் 21-ந்தேதி அறிவித்து இருந்தார். இந்த நிலையில், அவர் லிபியாவின் பக்கத்து நாடான நைஜருக்கு தப்பி ஓடிவிட்டார். லிபியாவில் இருந்து ராணுவ பாதுகாப்புடன் நியாமி நகருக்கு வந்ததாக மந்திரி மாருஅமாது தெரிவித்துள்ளார்.
ஷாதி கடாபி கால் பந்து வீரர் ஆவார். கடந்த 2004-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். கடாபியின் குடும்பத்தினர் தவிர அவரது ஆதரவாளர்கள் பலரும் நைஜரில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடாபியின் விமானப் படை தலைவர் அல்-ரிபி அலி அல் ஷரீப் உள்பட 3 ராணுவ ஜெனரல்களும், அவரது உதவியாளர்களும் நைஜரில் தங்கியுள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக உள்துறை பாதுகாப்பு தலைவர் மன்சூர் டாவ் தெரிவித்துள்ளார். இவர்கள் நியாமிநகரில் வீட்டு காவலில் ராணுவ பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Post a Comment