பிரான்சின் அணுமின் நிலையத்தில் வெடிவிபத்து - கதிர்வீச்சு அபாயம் இல்லையாம்
பிரான்சின் தென்பகுதியில் செயல்படாத பழைய அணுமின் நிலையத்தில் திடீரென நிகழ்ந்த வெடிவிபத்தில் ஒருவர் பலியானார்; நான்கு பேர் காயமடைந்தனர். கதிர்வீச்சு கசிவு அபாயம் இல்லை என, பிரான்ஸ் அணுமின் நிலைய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரான்சின் தென்பகுதியில், மார்கோல் என்ற அணுமின் நிலையம் உள்ளது. இதில் செயல்பட்டு வந்த மூன்று அணுமின் உலைகளும், பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது அங்கு, அணுமின் உலை எதுவும் இல்லை. மார்கோல் நிலையத்தில் தற்போது, அணுக் கழிவுகள் மறுசுழற்சி முறையில் சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிலையத்தில் உள்ள சுத்திகரிப்பு உலையில் நேற்று, திடீரென வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர் பலியானார்; நான்கு பேர் காயமடைந்தனர்.
மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் அணுக் கழிவுகள் அனைத்தும், குறைந்தளவு கதிவீச்சுத் திறன் கொண்டவை என்பதால், கதிர்வீச்சுக் கசிவு அபாயம் எதுவும் ஏற்படவில்லை என, பிரான்ஸ் அணுமின் நிலையக் கண்காணிப்பு அமைப்பான, "ஏ.எஸ்.என்.,' தெரிவித்துள்ளது. எனினும், வெடிவிபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Post a Comment