Header Ads



தற்கொலை தாக்குதலில புர்ஹானுதீன் ரப்பானி வபாத் - தியாகி என புகழாரம்

முன்னாள் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி   ரப்பானி செவ்வாய்க் கிழமையன்று  காபூலில் உள்ள அவரது வீட்டின் மீது நடத்தப்பட்ட   தாக்குதலில் கொல்லப்பட்டார் என   மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

ஆப்கானிஸ்தான்  முன்னாள்  ஜனாதிபதி  ரப்பானி ஆப்கனில் சமாதான பேச்சுவார்த்தைக்கு    உருவாக்கப்பட்டுள்ள உயர் அமைதி குழுவின் தலைவராக இருந்து வருகிறார் .

குண்டு வெடிப்பு நடந்த போது அவர் தலிபான் பிரதிநிதிகளுடன் பேசி கொண்டிருந்தார் என அங்கிருந்து வரும் செய்திகள்  தெரிவிக்கின்றன . "ரப்பானி தியாகிவிட்டார் ," என   காபூலில்  குற்ற புலனாய்வு துறை தலைவர் முகமது ஜாகிர்  ஒரு செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.