Header Ads



வடக்கு முஸ்லிம்களை புறக்கணித்து, சுவிற்சர்லாந்தில் பொய் கூறியது அரசாங்கம்

இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்த முடிவின் போது 290,000 பேர் இடம்பெயர்ந்து காணப்பட்டதாகவும் அவர்களுள் இன்னும் 7000 பேர் வரையிலானோரே மீள்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சுவிற்சர்லாந்து ஜெனீவா நகரில் ஐ.நா மனிதஉரிமை ஆணைக்குழுவின் 18 ஆவது கூட்டத்தொடரில் இன்று திங்கட்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், சரணடைந்த 11,600 பேரில் 9000 பேர் மறுவாழ்வளிக்கப்பட்டு சமுதாயத்துடன் இணைக்கப்பட்டு விட்டதாகவும் அவர்களுள் சிறுவர் போராளிகள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டதோடு இன்னமும் 2700 பேரே சமுதாயத்துடன் இணைக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை 1990 ஆம் ஆண்டு இலங்கையின் வடபுலத்து முஸ்லிம்கள் முற்றுமுழுதாக புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உட்பட்ட நிலையில், தற்போது அவர்களில் அரைவாசிப்பேரே மீண்டும் அந்த இடங்களில் மீளக்குடியேறியுள்ளனர். வடக்கு முஸ்லிம்களில் பலர் தமது தாயகப் பிரதேசத்தில் மீளக்குடியேறும் ஆர்வத்துடன் காணப்படுகிற போதிலும் இலங்கை அரசாங்கத்தின் உரிய உதவிகள் இன்மையால் அவர்கள் மீளக்குடியேறாமலும், அவர்களை மீளக்குடியேற்றும் விடயத்தில் அரசாங்கம் ஆர்வமற்று காணப்படுவதால் வடக்கு முஸ்லிம்கள் தொடர்ந்தும் மீளக்குடியேறாமலும் உள்ளனர்.

இந்நிலையில் தற்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைiமியலான அரசாங்கம் சர்வதேச நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அதனை மூடிமறைக்கும் நோக்குடன் இன்னும் 7.000 பேர் மாத்திரமே மீளக்குடியேற இருப்பதாக சுவிற்சர்லாந்தில் வைத்து பொய் கூறியுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.