இலங்கையர் எமிரேட்ஸ் செல்ல இரட்டை மருத்துவ பரிசோதனை அவசியம்
இலங்கை மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்குள் செல்கின்றவர்களுக்கு இரட்டை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் தொழில் அல்லது வதிவிட அனுமதி விநியோகிக்கப்படுவதற்கு முன்னதாக இந்த மருத்துவ பரிசேதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என துபாயை தளமாகக் கொண்ட காலீஜ் டைம்ஸ் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் தமது தொழில் மற்றும் வதிவிட அனுமதியை புதுப்பிக்க எண்ணியுள்ளவர்கள் இந்த மருத்துவ பரிசோதனைகளை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் மாத்திரமே செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment