யாழ்ப்பாணத்தில் இப்படியும் நடக்குதாம்..!
சந்தேகத்திற்கு இடமான முறையில் மலசலகூடத்தில் ஒளிந்திருந்த இராணுவவீரர் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ். கொட்டடி கோணாந்தோட்டம் பகுதி வீடொன்றில் வீட்டின் உரிமையாளர் பார்த்துக் கொண்டிருந்தபோது இராணுவ வீரர் ஒருவர் அங்குள்ள மலசலகூடத்தினுள் மறைந்து கொண்டதை அவதானித்தார். இதனையடுத்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்ததை அடுத்து ஒன்றிணைந்த மக்கள் அவரைப் பிடித்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இராணுவ வீரர் யாழ்நகரப் பகுதியிலுள்ள 512 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்தவர் எனவும் மகியங்கனையைச் சொந்த இடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment