Header Ads



இலங்கையில் பறவை காய்ச்சல் வைரஸினை தடுக்க நடவடிக்கையாம்

பறவைக் காய்ச்சல் வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுப்பதற்காக விசேட செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது. கோழிப்பண்ணைகள் சுற்றுலாப்பறவைகளை கண்காணிப்பதற்கு மாவட்ட மட்டத்தில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக என குமார டி சில்வா குறிப்பிட்டார்.

தபோது மீண்டும் ஆசிய வலய நாடுகள் சில வற்றில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. பரிசேதனை மேற்கொள்ளப்படாத கால்நடை உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள்  நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடும் சோதனைகளின் பின்னரே பொருட்கள் அனுமதிக்கப்படும்.  அத்துடன் சுற்றுலாப் பறவைகறள் பயணிக்கும் மார்க்கங்கள் மற்றும் அவற்றின் தங்குமிடங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 

No comments

Powered by Blogger.