லண்டன் ஆடை அலங்கார நிகழ்வில் முதன்முறையாக இலங்கையர்
உலகிலேயே பிரபலமான ஆடை அலங்கார நிகழ்வுகளில் ஒன்றான லண்டன் ஃபாஷன் வீக் எஸ்தனிகா நிகழ்வில் இந்தத் தடவை இலங்கையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிபுணர் ஒருவரும் பங்குபற்றுகிறார். இலங்கை பாரம்பரிய ஆடையலங்காரங்கள் மற்றும் நவீன அலங்காரங்கள் ஆகியவற்றை இணைத்து புதிய உடையலங்காரங்களை வடிவமைத்துள்ள சரினி சூரியஹே இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
இலங்கை ஆடையலங்கார விழுமியங்கள் விருதை 2010 ஆம் ஆண்டு வென்ற சரினி ஆடையலங்காரத்தை தனது பட்டப்படிப்புக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கற்றவராவார். இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்ற முதலாவது இலங்கையர் என்பதில் அவர் பெருமையடைகிறார். பல சர்வதேச வாடிக்கையாளர்களையும், ஊடகங்களின் கவனத்தையும் தான் இதன் மூலம் பெறலாம் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகில் ஒரு முக்கிய ஆடை ஏற்றுமதி நாடாக இலங்கை திகழுகின்ற போதிலும், ஆடை வடிவமைப்புத்துறையில் அது ஜொலிக்கவில்லையே என்று கேட்டதற்குப் பதிலளித்த சரினி அவர்கள், அதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை தான் உணர்வதாகவும் தற்போது இலங்கையில் நிறைய உள்நாட்டு வடிவமைப்பாளர்கள் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

Post a Comment