அதிகாரிகள் உதவவில்லை - சவூதியில் 17 வருடம் தடுத்துவைக்கப்பட்ட பெண் வேதனை
விடுதலை செய்யப்பட்டு 9 மாதங்கள் கடந்த நிலையிலும் தம்மை நாட்டிற்கு திருப்பி அழைப்பது தொடர்பில் அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை என 17 வருடங்கள் சவூதி அரேபிய வீடொன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுதலையான இலங்கைப் பணிப்பெண் தெரிவிக்கிறார்.
குறித்த பணிப்பெண் களுத்துறை தெற்கு கமகொட, வத்தேகெதர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. குசுமா நந்தினி என்றழைக்கப்படும் இப் பெண் இதுவரையும் ஒலேய்யா முகாமில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதரகத்திடம் வினவியபோது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைக்க வேண்டிய சம்பள நிலுவையை பெற்றுக்கொடுத்து அவரை விரைவில் நாட்டிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுப்பதாக அதன் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
17வருடங்கள் சவூதி அரேபியாவில் உள்ள வீடொன்றில் பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த குசுமானி நந்தினியை இலங்கை தூதரக அதிகாரிகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment