திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியம் - அரசாங்கத்திடம் கோரிக்கை

திருமணத்திற்கு முன்னர் இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும் திட்டத்தை கட்டாயப்படுத்துமாறு தேசிய தெலசீமியா மத்திய நிலையம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தெலசீமியா நோயுள்ள திருமணத் தம்பதியினருக்கு பிறக்கும் குழந்தைகளில் வருடத்திற்பு 80 குழந்தைகள் நோயாளர்களாக காணப்படுவதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தெலசீமியா நோயுள்ள தம்பதியினரை அடையாளம் காண விசேட பரிசோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருவதாக தேசிய தெலசீமியா மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
குருநாகல், பதுளை, அநுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இதுவரையில் தெலசீமியா மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து. அத்துடன் மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய வைத்தியசாலைகளுக்கு அருகிலும் தெலசீமியா மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment