Header Ads



ஒஸாமாவின் ஜனாஸாவை கடலில் போட்டது எவ்வாறு..?

ஒசாமாவின் உடலை, எந்த நாடும் பெற்றுக் கொள்ள முன்வராது என்பதால் தான், அவரது உடலை கடலுக்குள் மூழ்கடித்தோம் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில், ஒசாமா கொல்லப்பட்ட பிறகு, அமெரிக்க அதிரடிப் படையினர் தாங்கள் வந்த ஹெலிகாப்டரிலேயே ஒசாமாவின் உடலை எடுத்துச் சென்றனர்.

இது குறித்து, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு குழு ஆலோசகர் ஜான் ப்ரினான், நிருபர்களிடம் கூறியதாவது,

ஈராக்கில் சதாம் உசேன் கொல்லப்பட்ட பின், அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தை, அவரது ஆதரவாளர்கள், வழிபாட்டு தலமாக மாற்றி விட்டனர். இதே நிலை, ஒசாமாவுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான், அவரது உடலை, கடலுக்குள் மூழ்கடித்தோம்.ஒசாமாவின் பயங்கரவாத ஆதரவாளர்கள், அவரின் புதைக்கப்பட்ட இடத்தை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தக்கூடாது என்பதால் தான், அரபிக்கடலின் வடக்கு பகுதியில், கார்ல் வின்சன் விமானம் தாங்கி கப்பல் மூலம், ஒசாமாவின் உடலை கடலுக்குள் தள்ளினோம்.

முன்னதாக, அவருக்கு, முஸ்லிம் மதப்படி சடங்குகள் செய்யப்பட்டன. அவரது உடல் கழுவப்பட்டது. அரபு மொழி தெரிந்தவர் மூலம், குர் ஆன் பகுதிகள் சம்பிரதாயமாக ஓதப்பட்டது. அதன் பின், அவரது உடல், வெள்ளை துணியால் மூடப்பட்டு, கனமான பையில் அடைக்கப்பட்டு, ஒரு பலகை மீது வைத்து கடலுக்குள் தள்ளப்பட்டது.அபோதாபாத் வீட்டில் ஒசாமா பயன்படுத்திய ஒவ்வொரு பொருளையும் புலனாய்வு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஒசாமாவின் தலை மற்றும் மார்பு பகுதியில் அதிரடிப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.இவ்வாறு ஜான் ப்ரினான் கூறினார்.

No comments

Powered by Blogger.