யாழ்ப்பாண முஸ்லிம்களின் சவால்கள் குறித்து அராய்வு
யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் மே மாதத்திற்கான பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 01-05-2011 அன்று யாழ்ப்பாணம் ஒஸ்மானியா வளாகத்தில் காலை 10 மணிமுதல் பிற்பகல 2.30 வரை சம்மேளனத்தின் தலைவர் சகோ.எம்.யூ.எம். தாகிர் தலைமையில் நடைபெற்றது.
29 சம்மேளன அங்கத்தினர்களையும் மூன்று புதிய அங்கத்தவர் விண்ணப்பதாரிகளையும் உள்ளடக்கியே கூட்டம் இடம்பெற்றது, பல்வேறு விடயங்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டன.
மீள்குடியேற்ற செயற்பாட்டில் காணப்படும் சவால்கள் குறித்த விடயம் முக்கியத்துவம் பெற்றது, மீள்குடியேற்ற செயற்பாட்டினை அறிவியல் சார்ந்த திட்டமிடலுடன் முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து வெகுவாக வலியுறுத்தப்பட்டது. சம்மேளனத்தின் நோக்கம் மீள்குடியேற்றத்திற்காக செயற்படும் அமைப்புகளை ஒருங்கிணைப்பதுவே தவிர மீள்குடியேற்றத்தை நேரடியாக மேற்கொள்வதல்ல என்பதாகவே ஆரம்பத்தில் அமைந்திருந்தது. ஆனால் தற்போது நிலைமைகளில் மாற்றங்கள் காணப்படுகின்றது. யாழ் சமூகத்தில் இயங்கும் அமைப்புகள் பல மீள்குடியேற்றம் தொடர்பாக தெளிவான செயற்பாடுகளை கொண்டனவாக இல்லை எனவே சம்மேளனம் மீள்குடியேற்றம் தொடர்பாக நேரடி செயற்பாடுகளை திட்டமிட்டு முன்வைக்க வேண்டும் அதற்கு ஏற்றவகையில் சம்மேளனத்தின் கட்டமைப்பு ஒழுங்குபடுத்தப்படவேண்டும் என்பதாகவும் பலர் கருத்துக்களை முன்வைத்தனர். மேற்படி விடயங்கள் தீவிர வாதப்பிரதிவாதங்களுக்கும் கலந்துறையாடலுக்கும் உட்படுத்தப்பட்டது, அதன் முடிவில் பின்வரும் மூன்று உப குழுக்கள் அமைக்கப்பட்டன.
மக்கள் பங்களிப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும், சமூகரீதியான விடயங்களை ஒழுங்குபடுத்தவுமென பின்வரும் நபர்களைக் கொண்ட உப செயற்குழு அமைக்கப்பட்டது.
சகோ.எம்.ஜீ.பஷீர், சகோ.தையூப், சகோ, சுப்ஹான், சகோ.ஸியாத், சகோ,ஸினாஸ், சகோ,ஜினூஸ்.
திட்டமிடல் மற்றும் பொது உறவு சார்ந்த பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடல் பொது உறவுக்கான உப செயற்குழு பின்வருவோரைக்கொண்டு அமைக்கப்பட்டது.
சகோ.அமீன், சகோ.றமீஸ் (சட்டத்தரணி) சகோ.அஜ்மல், சகோ,ரொஷான், சகோ.சுனீஸ், சகோ.பஸ்லின், சகோ.அஸ்பர், சகோ.முஜாஹித், சகோதரி ஷர்மிளா, சகோதரி, றமீஸ் பாதுஷா
அபிவிருத்தி சார்ந்த அரச , தனியார் பங்களிப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு பின்வருவோர் கொண்ட அபிவிருத்திக்கான உப செயற்குழு அமைக்கப்பட்டது.
சகோ.எம்.யூ,எம், தாஹிர், சகோ,ஜமால், சகோ, நியாஸ், சகோ,நஸ்ரூன், சகோ,நஜீப், சகோ,யஸ்ரின், சகோ,நிபாஹிர், சகோ,அஷ்கர், சகோ,முஸ்தபா, சகோ.நிலாம்,
மேற்படி உப குழுக்களை இணைக்கின்ற வகையிலும் அவற்றுக்கிடையேயான பரஸ்பர இயக்கம் தொடர்பிலும் சம்மேளனத்தின் செயலாளர் மற்றும் இணைப்பாளர் ஆகியோர் கடமையாற்றுவார்கள்.
சம்மேளனத்தின் புதிய கட்டமைப்பு தொடர்பாக அடுத்துவரும் பொதுக்கூட்டத்தில் உத்தேச முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டு தீர்மானங்கள் பெறப்படும் என்றும் கூறப்பட்டது.
காணியற்றோருக்கு காணிகளை சகாய விலைகளில் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான முதற்கட்ட செயற்திட்டம் எதிர்வரும் மே 7ம் திகதி மேற்கொள்ளப்பட ஆரம்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்மேளனத்தின் அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான தலைவர் தெரிவு இடம்பெற்றது. அதன்போது அடுத்த இரண்டு மாதங்களுக்கான தலைவராக சகோ.அல்ஹாஜ் அமீன் அவர்களது பெயர் சபையோரால் பிரேரிக்கப்பட்டது, அப்போது இணைப்பாளர் சகோ.முபீன் அரசியல் கட்சி சார்புடையோரை தலைவராக நியமிக்க முடியாது என்ற கருத்தை முன்வைத்தார், இக்கருத்து சம்மேளன நடைமுறைகளுக்கு ஒவ்வாத கருத்து எனவும் அவ்வாறு அரசியல் ஈடுபாடுடையோரை நியமிக்காமல் இருப்பது பொருத்தமான நடைமுறையல்ல என சபையில் பரவலான கருத்துக்கள் எழுந்தன, அதனைத்தொடர்ந்து சகோ. அல்ஹாஜ் அமீன் தான் குறித்த தெரிவில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார் அதனைத்தொடர்ந்து சபையில் சகோ.ஜமால். சகோ.சுப்ஹான், சகோ.நிலாம் ஆகியோருடைய பெயர்கள் தலைமைத்துவத்திற்காக பிரேரிக்கப்பட்டது, ஏனைய இரண்டு சகோதரர்களும் தாம் தெரிவில் இருந்து நீங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சகோ.ஜமால் அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்கான (2011- மே,ஜூன்) தலைவரக செயலாற்றுவார், சகோ.ஜமால் யாப்பாணத்தில் வசிப்பவர் என்பதும் மொஹிதீன் ஜும் ஆப்பள்ளிவாயலின் தர்மகர்த்தா என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் பெரிய பள்ளியில் அகில இலங்கை தப்லீக ஜமாஅத்தினரின் இஜ்திமா நடைபெறுவதால் குறித்த சம்மேளனக்கூட்டம் சுருக்கமாக நடைபெற்றது என்றும் இதனால் சம்மேளனத்தின் அங்கத்தினர் அனைவரினதும் கருத்துக்களை முழுமையாக உள்வாங்க முடியாமல் போனமை குறித்தும் செயலாளர் தமது கவலைகளைத் தெரிவித்துக்கொண்டார்.

Post a Comment