ஏனைய சமூகத்தினரை புண்படுத்தாதவாறு முஸ்லிம்கள் அமல்களில் ஈடுபடவேண்டும்
உலகில் சிறுபான்மை சம்பந்தமான சட்ட விதிமுறைகள் மற்றும் அதற்கான உரிய தீர்வுகள் என்பனவற்றை பெற்றுக்கொள்ளும் வகையில் அவை தொடர்பான சர்வதேச மட்டத்திலான கருத்தரங்கொன்றை இலங்கையில் நடாத்த தீர்மானித்திருப்பதாக நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நீதி அமைச்சின் அனுசர ணையுடன் மேற்கொள்ளப்படும் இந்த சர்வதேச கருத்தரங்கிற்கு இந்த நூற்றாண்டில் மிகவும் தலைசிறந்த திறமையான மார்க்க சட்ட வல்லுநர்கள் அழைக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.
மடவளை பஸார் வை. எம். எம். ஏ. ஏற்பாடு செய்திருந்த விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாம் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம் என்ற எண்ணம் எமது மனதில் இருக்கவேண்டும். பெரும்பான்மை மக்களையும் ஏனைய மாற்று மதத்தினரதும் மனம் புண்படாதவாறு எமது மத அனுட்டானங்களுக்கான வழி முறைகளை எமது அடிப்படை உரிமை களுக்கு மாற்றமல்லாத வழியில் வீழ்வது எப்படி? இருந்த போதிலும் இவ்வாறான வாழ்க்கை வழிமுறைகளில் சில இடங் களில், சில சந்தர்ப்பங்களில் தாம் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவைகள் ஏற்படு கின்றன. ஆனால் எல்லா விடயங்களிலும் விட்டுக்கொடுக்கவும் முடியாது. ஆனால் இவைகளை எவ்வாறு எல்லா தரப்பு களுக்கும் புரிந்துணர்வோடு தெளிவுபடுத்து வது என்பது மிக முக்கியமான விடய மொன்றாகும்.
மேலும், முஸ்லிம் சமூகம் சார்ந்த சில ஒழுக்க விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைக்கேற்ப நாம் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் வாழ்கின்றோம். எமது அடிப்படை நிபந்தனைகளுக்கு மாற்றமில்லாத வாழ்க்கை நடவடிக்கை களுக்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி நாம் அறிய வேண்டியவர்களாக உள்ளோம்.
அடுத்ததாக நாடு பூராகவும் நிலவுகின்ற அஹதிய்யா பாடசாலைகள் எதுவித கொடுப்பனவுமின்றி வார இறுதி நாட்களில் பகுதிநேர வகுப்பாக இயங்குவது இந்நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு மிகப் பெரிய சேவையாக அமைந்துள்ளதை நாம் பெருமையாக பேசவேண்டும்.
எந்த கட்சி தேர்தலுக்கு வந்தாலும் முஸ்லிம் சமூகத்திலிருந்து விடுக்கப்படுகின்ற மிக முக்கியமான கோரிக்கையொன்றுதான் பாடசாலைகளில் மெளலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான குறைபாட்டை தீர்த்துத் தரவேண்டும் என்பது. இந்த கோரிக்கைக்கு இந்த அரசாங்கம் இதுவரை நூறு மெளலவி ஆசிரியர்கள் நியமித்துள்ளது.
இனிவரும் காலங்களில் முந்நூறாவது மெளலவி ஆசிரியர்கள் நியமித்தால்தான் ஓரளவாவது திருப்தியான சேவைகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு முன்வைக் கின்ற குறைபாடுகளை தீர்த்துவைக்க திரைசேரியில் நிதி ஒதுக்கீட்டில் பிரச்சினை இருப்பதாக தெரிய வருகிறது. இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

Post a Comment