யாழ் கோழிப் பண்ணையாளர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கோழிக்குஞ்சுகள்
யாழ்.மாவட்ட கோழிப்பண்ணையாளர்களுக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நல்லின கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன.
நாட்டில் கோழிமுட்டைக்கு நிலவும் தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து வளர்ந்த கோழிக்குஞ்சுகளை இறக்குமதி செய்து வரும் செயற்திட்டத்தில் யாழ்ப்பாண கோழிவளர்ப்ப பண்ணையாளருக்கும் இக்கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளன.
கோழிக்குஞ்சுகள் தேவையானவர்கள் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் முழுப்பணத்தையும் செலுத்தி பதிவுகளை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட கால்நடை அபிவிருத்தி மற்றும் சுகாதார உதவிப் பணிப்பாளர் திருமதி வத்சலா அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இக்கோழிக்குஞ்சுகள் ஒவ்வொன்றும் 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. இக்கோழிக்குஞ்சுகள் மிகக் குறுகிய காலத்தில் முட்டையிடும் நிலைக்குவந்துவிடும் எனவும் அவர் கூறினார்.

Post a Comment