Header Ads



கோழி இறைச்சி 350 ரூ ! முட்டை 14 ரூ !!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சி, முட்டை என்பன சந்தையில் குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு கூறியது.


கடந்த நாட்களில் கோழி இறைச்சி, முட்டை என்பவற்றின் விலைகள் அதிகரித்ததையடுத்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. 

இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சி ஒரு கிலோ 350 ரூபாவுக்கும் முட்டை 11 முதல் 12 ரூபாவிற்கும் விற்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சு கூறியது. 

இதேவேளை, 16 ரூபாவுக்கு விற்கப்பட்ட முட்டை தற்பொழுது 14 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் முட்டை குறைந்த விலைக்கு விற்கப்படுவதோடு சந்தையில் முட்டை விலை மேலும் குறையும் எனவும் அமைச்சு தெரிவித்தது. சதொச ஊடாக மட்டுமன்றி தனியார் துறையினூடாகவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பன விற்கப்படவுள்ளன.

No comments

Powered by Blogger.