Header Ads



பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தி


வடக்கு மற்றும் கிழக்கில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக ஹஜ் பெருநாளை கொண்டாட இம் முறை வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரதமர் தி.மு. ஜயரத்னா விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மற்றும் கிழக்கில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக ஹஜ் பெருநாளை கொண்டாட இம் முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டியதன் மூலமே அவ்வாறான ஒரு சூழல் ஏற்பட்டுள் ளது.

அனைத்து மதங்களிலும் கூறப்படும் மனிதாபிமானம்  மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இஸ்லாம் மதத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஹஜ் பயணத்தின் மூலம் கூறப்படும் மத அனுஷ்டிப்பு ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக அமைகிறது என்று பிரதமரின் ஹஜ் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.