நாகப்பட்டினம் செல்ல விரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


நாகப்பட்டினம் - மற்றும் காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் 'சுபம் ஃபெர்ரி' (Subham Ferry) கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.


இன்று (4) காங்கேசன்துறை பகுதியில் உள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கப்பல் சேவைக்கு பொறுப்பான ஜெயசீலன் தெரிவிக்கையில்,


 கட்டணக் குறைப்பு : பயணப் பொதி (Luggage) சலுகை


நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசனத்துறைக்கும், காங்கேசனத்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கும் இரு வழித்தடங்களிலும் பயணக் கட்டணம் ₹5,500 ஆகக் குறைக்கப்பட்டு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.


பயணிகள் தங்களது உடமைகளில், 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரை கைப்பைகள் (Hand Luggage) ஆகியவற்றை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம். See less

No comments

Powered by Blogger.