Header Ads



சுவஸ்திகா என்ற மனிதபிமானி


- Ahnaf Jazeem -


படு பயங்கரமான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு பிரிவு இரண்டாம் மாடியிலே நான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருந்த அந்த காலப்பகுதி, எனக்கும் உலகத்துக்குமான தொடர்பு முற்றாக வேரறுக்கப்பட்டு  உலகில் என்ன நடக்கிறது என்பது பற்றி எதுவும் அறியாத அந்த நிலையில் எனக்காக இங்கே கடுமையாக பாடுபட்டு கொண்டிருந்தவர்கள் எனது  சட்டத்தரணிக் குழாம். 


அந்த வகையிலே  அந்த பயங்கரவாத தடுப்பு பிரிவுக்குள் இரண்டாம் மாடிக்கு யாருமே வர துணிய மாட்டார்கள். ஆண்களே நுழைய அஞ்ச தயங்குகின்ற அந்த இடத்திற்கு ஒரு பெண்ணாக துணிந்து வந்தவர் தான் இந்த சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கம்.


சட்டத்தரணிகளான சஞ்சய் வில்சன், அதேபோல சுவஸ்திகா அருலிங்கம் இருவரும் என்னை பார்க்க இரண்டாம் மாடிக்கு வருகை தருகிறார்கள். அது கொரோனா கிருமி தொற்று, உலகப் பெருந்தொற்று பரவிக்கிடந்த காலப்பகுதி. இயல்பிலே பயங்கரவாத தடுப்பு பிரிவுக்குள் செல்வதற்கு அனுமதி இலகுவில் கிடைப்பதில்லை. அதுவும் இந்த கொரோனா காலப்பகுதியிலே அனுமதி என்பது கிடைப்பது மிக மிக மிக அரிதான ஒரு விடயம். அந்த சந்தர்ப்பத்திலும் அப்படி ஒரு அனுமதியை பெற்றுக்கொண்டு அதுவும் என்னை பார்க்க சஞ்சய் வில்சன் சேரும் அதேபோல ஒரு பெண்ணாக சுவஸ்திகா அருலிங்கம் அவர்களும் அங்கே வருகை தந்திருந்தார்கள். உண்மையிலே பாரதி கூறுகின்ற ஒரு வீரப் பெண்ணாக சுவஸ்திகா அருலிங்கத்தை நான் அன்று கண்டேன். 


அங்கே வந்து என்னையும் சட்டத்தரணிகளையும் சந்திக்க வைப்பதற்கு அமர்ந்து பேசுவதற்கு இருக்கை இரண்டு தந்தார்கள். என்னை ஒருபுறமும், அவர்களை மறுபுறமும் எனக்கும் அவளுக்குமான இருக்கைக்கான இடைவெளியே கிட்டத்தட்ட 2 m-ஐ கடந்திருந்தது. அதாவது இவர்கள் பேசுவதைவிட சைகை மொழியில் பேசலாம் போல.  அப்படி இருந்த அந்த சந்தர்ப்பத்திலே சட்டத்தரணி சஞ்சய் அவர்கள் வந்து எனக்கு கை தந்துவிட்டு போனார்கள்.


 கையே கொடுக்கிறோம். பக்கத்தில் அருகில் வையுங்கள். இனி பிரச்சனை இல்லை என்றவாறு எமது சம்பாஷணை தொடங்கியது. மிகக் குறுகிய நேரப்பகுதி. கஅந்த நேரத்திலே நான் சொல்வதையெல்லாம் துணிச்சலாக எதற்கும் பயப்படாமல் மொழிபெயர்த்து ஆங்கிலத்திலே வழங்கியவர்தான் சுவஸ்திகா அருலிங்கம். அதேபோல சுவஸ்திகா அருலிங்கத்தை முதலாவது சந்திப்பது அதுதான். 


இரண்டாவது சந்திப்பு நான் CRP ரிமாண்ட் பிரிசன் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருக்கின்ற வேளை உயர் நீதிமன்றத்தினுடைய உத்தரவின் பேரில் என்னை விசாரிப்பதற்காக சஞ்சய் மற்றும் சுவஸ்திகா அருலிங்கம் அவர்கள் அங்கே வருகை தந்திருந்தார்கள். அந்த வேளையிலே என்னை அமரவைத்து மிக பக்குவமாக என்ன என்ன என்று ஒவ்வொன்றாக கேள்வி கேட்டு அவற்றையெல்லாம் சஞ்சய் கேட்கக் கேட்க அதை மொழிபெயர்த்து எனக்கு விளக்கி என்னிடம் புதிய கேள்விகளைக் கேட்டு நான் சொல்லச் சொல்ல அத்தனையும் கிட்டத்தட்ட 40 45-க்கு மேற்பட்ட பக்கங்கள் ஓயாமல் அந்த குறுகிய அந்த 1 மணி நேரத்துக்குள் ஓயாமல் எழுதியே களைத்துப்போனார்கள் சுவஸ்திகா அருலிங்கம்.  


 புத்தளம் மேல் நீதிமன்றத்தில் வைத்து எனக்கான பிணை வழங்கப்பட்டது. ஆக நான் பிணையில் விடுதலை ஆகப்போகிறேன் என்பது உறுதியாகிவிட்டது. ஆனாலும் வீட்டுக்கு செல்ல முடியாது. இன்னொரு வழக்கு இருக்கிறது என்று சிறைச்சாலை அதிகாரிகள் அதை தடுக்கிறார்கள். ஆகவே நான் மேல் நீதிமன்றத்தில் உள்ள இருக்கின்ற சிறைக்கூட்டுக்குள்ளே இருக்கிறேன். உள்ளே இருந்து நீதிமன்றத்தில் நடைபெறுகின்ற சகலதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அப்பொழுது நான் விடுதலை ஆகிவிட்டேன். பிணை கிடைத்துவிட்டது என்று சந்தோஷம் எல்லோருக்கும். ஆனால் மீண்டும் வெளியேற முடியாது. வீட்டு உறவினர்கள் எல்லாம் வெளியே இருக்கிறார்கள். நான் வருவேன் என்று அந்த சந்தர்ப்பத்திலே எனக்கு விடுதலை இல்லை என்ற நிலை வந்தபோது உள்ளே எனக்காக சஞ்சய், சுவஸ்திகா ,  பலர் ரஞ்சன் ராமலிங்கம் , தேவபாலன்,  போன்றவர்கள் கடுமையாக  இயன்ற அளவு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையிலே சுவஸ்திகா மிகவும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு வாதிட்டுக்கொண்டு பல முயற்சிகளை செய்து பார்த்தார்கள். இறுதியாக இன்று  என்னை விடுதலை செய்ய முடியாது என்ற நிலைப்பாடு வந்தபோது  சுவஸ்திகா அவர்கள் என் சிறை கம்பியருகே வந்து அஹ்னப் பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு நாள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ஆறுதலை சொல்லிவிட்டு சென்றார்கள்.


சிறை என்பது அரக்கர்கள் இருக்கின்ற பயங்கரமான இடம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு இடம். அந்த இடத்தில் கூட துணிச்சலாக வருகை தந்தவர்தான் சுவஸ்திகா அருலிங்கம். 


 அடுத்த நாள் என்னை விடுதலை செய்தார்கள் சகல ஏற்பாடுகளையும் வெளியிலே மும்முரமாக சட்டத்தரணிகள் செய்து கொண்டிருந்த வேளையிலே நான் வெளியே செல்வேனா என்ற எந்த நம்பிக்கையும் இல்லை எனக்கு. இருந்தாலும் பரவாயில்லை என்று இருக்கின்ற வேளையில் மாலை மாலை நேரம் 4:30 அல்லது 5:00 மணி இருக்கும் அந்த நேரப் பகுதியிலே என்னை வெளியே விடுதலை செய்வதற்காக சிறை வாயிலை திறந்து விட்டார்கள்.


 அப்பொழுது சஞ்சய் உள்ளே வந்திருக்கிறார் ஆனால் எனக்கு தெரியாது. விடுதலை அடைந்த நிலையில் முதன் முதலாக சுவஸ்திகா அருலிங்கத்தை  நான் சந்திக்கிறேன்.   


 அந்த சிறை வாசல் சிறைக்குள் இன்னும் சிறையை விட்டு வெளியே வரவில்லை. சிறை அந்த முன்பகுதியிலே இருக்கிறேன். என்னை கண்டதும் சுவஸ்திகா அருலிங்கம் அவர்கள் சஞ்சய் எங்க என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை என்றேன். பரவாயில்லை அவர் வருவார் என்று சொல்லி என்னை உடனடியாக வெளியேறுங்கள் இங்கிருந்து. மீண்டும் ஏதாவது செய்து விடலாம் என்று சொல்லி என்னை எப்படி ஒரு தம்பியை சகோதரனைப் போல என்னை அழைத்துச் சென்று உடனடியாக அந்த ஒரு காரிலே என்னை ஏற்றி அவசர அவசரமாக விரைந்தார்கள். 


 அதன் பிறகு நான் ஒரு இடத்திற்கு வந்து விடுதலை அடைந்ததாக நான் உணர்ந்து கொண்டேன். அப்பொழுதுதான் சுவஸ்திகா அருலிங்கம் அவர்கள் எனது தாய் தந்தை சகோதரி மற்றும் குடும்பத்தோடு இருந்து எனக்காக அந்த இடத்திலே பல ஆறுதல்களையும் பல வழிகாட்டல்களையும் செய்தார்கள். பல தடவை எனக்காக தொலைபேசியிலே தொடர்பு கொண்டு எனக்கு பல வழிகாட்டல்களை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு இன்னும் அவர்களை நான் நேரில் சந்திக்கக் கிடைக்கவில்லை. சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லை. அந்த அளவு அவர்கள் போராட்ட வேலைகளிலும் சமூகத்துக்காகவும் போராடுவதில் மிக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். அந்த வகையிலே சுவஸ்திகா அருலிங்கத்திற்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

No comments

Powered by Blogger.