Header Ads



தெற்கு அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்குவர, இன குரோத கருத்துக்களை தெரிவிக்கின்றனர்


தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆனால் நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்க நாம் அனுமதிக்க மாட்டோம்


வடக்கில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில் எடுத்தோம். இதனால் , வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி உள்ளோம் இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சட்டவாட்சியை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்து வருகின்றனர்.


வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற எந்த பாகுபாடுகள் இன்றி அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ளது 


பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கோப்பாய் காவல் நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.