தெல்தெனிய கொலை - யாழ்ப்பாணத்தில் சிக்கிய பிரதான சூத்திரதாரி
தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான நபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது மனைவி ஆகியோர் அவர்களது குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்
நேற்று (23) தம்பதியினர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கி பேருந்தில் பயணித்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (24) அதிகாலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்படும் போது பிரதான சந்தேகநபர் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று வேடமணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

Post a Comment