ரில்வின் சில்வா கூறியது போன்ற, ஒருமுறை இருக்கிறதா..?
இலங்கையில் நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்ள மாகாணத் தேர்தல்கள் இந்த ஆண்டுக்குள் நடத்துவது சாத்தியமற்றது என மகிந்த தேசப்பிரிய கருத்து வெளியிட்டுள்ளார்.
மாகாண தேர்தல்கள்தாமதமாகியிருப்பதற்கு நாடாளுமன்றம் மற்றும் நாட்டை ஆட்சி செய்த, ஆட்சி செய்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளுமே பொறுப்பேற்க வேண்டும்.
தேர்தலை நடத்த ரில்வின் சில்வா, நிதி இல்லை என்றும் அந்தப் பணம் டித்வா பாதிப்புகளை சீர்செய்ய செலவிடப்பட்டுவிட்டதாகவும் கூறியிருந்தார். பணத்தை அவ்வாறு டித்வா செலவுகளுக்கு செலவிட்டதாகக் கூறுவது ஒரு சுவாரசியமான விடயம். நாங்கள் அரச சேவையில் இருந்த காலத்தில் அப்படி ஒரு விடயத்தைக் கேள்விப்பட்டதில்லை. இப்போது அப்படி ஏதும் முறை இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை“ என தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment