Header Ads



விமல் வீரவங்ச சற்றுமுன்னர் கைது


முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.   தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று (25)  முன்னிலையான நிலையில் அவர்  கைதாகியுள்ளார்


கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ வெற்றி தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வுக்கு தடையேற்படுத்திய சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை வழங்க முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கடந்த சனிக்கிழமை தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.  


எனினும் அவர் அன்றைய தினம் முன்னிலையாகாது இன்று குறித்த பொலிஸ் நிலையத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.