Header Ads



நிதியமைச்சின் உயர் அதிகாரி ராஜபக்ஷ வின் மரணத்திற்கு காரணம் என்ன...?


சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த மரணத்திற்கான காரணம் தவறான முடிவெடுத்தமையே என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட 4  பேர் கொண்ட சட்ட மருத்துவ நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.


திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ (30) தனது வீட்டின் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.


அதன்படி, குறித்த மரணம் அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களால் ஏற்பட்ட தற்கொலை என்று விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.