11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தீர்க்கப்படாமல் தேங்கிக்கிடப்பதாகத் தகவல்
இலங்கையிலுள்ள நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள் தீர்க்கப்படாமல் தேங்கிக்கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த 2025 ஜூன் 30ஆம் திகதி வரையான தரவுகளின் அடிப்படையில், நாடளாவிய ரீதியிலுள்ள 293 நீதிமன்றங்களில் மொத்தம் 1,134,474 வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.

Post a Comment