எரிபொருள் பவுசர் விபத்து - அள்ளிச்சென்ற மக்கள்
பதுளை - கொழும்பு பிரதான வீதியின் புவக்கஹவெல பிரதேசத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் வண்டியொன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
நேற்று (07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இயந்திரக் கோளாறே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின் போது பவுசர் வீதியில் குடைசாய்ந்ததுடன், அதில் 33,000 லீற்றர் எரிபொருள் இருந்தது. பவுசர் குடைசாய்ந்ததையடுத்து அதிலிருந்த எரிபொருள் வீதி முழுவதும் கொட்ட, அந்த எரிபொருளைச் சேகரிப்பதற்காக மக்கள் பாத்திரங்களுடன் அலைமோதினர்.

Post a Comment