யேசு கிறிஸ்துவின் சிலையினை உடைக்கும் இஸ்ரேலிய படைவீரர்
தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலிய படைவீரர் ஒருவர்;, இயேசு கிறிஸ்துவின் சிலையினை உடைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அந்த சம்பவம் உண்மையானது என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் 'ஜக்ஹம்மர்' கருவியைப் பயன்படுத்தி இயேசு சிலையின் தலைப்பகுதியை உடைக்கும் காட்சி அந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.
லெபனானின் டெபல் கிராமத்தில் இந்தச் சிலை அமைந்துள்ளது. மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

Post a Comment