Header Ads



சொத்து விபரங்களை சமர்ப்பிக்கவுள்ள மகிந்த


தனது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த தெரிவித்துள்ளார்.


2010 – 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை ஒன்றிற்கு அமைவாக, தனது சொத்து விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.


எனக்கோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களுக்கோ சொத்துக்களை மறைக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அதற்கமைய, ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இணங்க உரிய ஆவணங்களை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.