Header Ads



நாட்டின் வரலாற்றில் மிகப்பாரிய திட்டமிட்ட கொள்ளை - 30 பில்லியன் ரூபா நஷ்டம்


இலங்கையின் நிலக்கரி கொள்வனவு நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள், ஊழல்கள்  காரணமாக நாட்டுக்கு சுமார் 30 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக எஸ்.எம்.மரிக்கார் Mp தெரிவித்துள்ளார்.  


இது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு மிகப்பாரிய திட்டமிட்ட கொள்ளை. விநியோகஸ்தர்கள் முறையாகப் பதிவு செய்யப்படுவதற்கு முன்னரே அவர்களுக்கு ஏல ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கணக்காய்வாளர் நாயகத்தின் ஆலோசனைகளை மீறி, 42 நாட்களாக இருந்த விலைமனுக் காலம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.


தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்கங்களின் முக்கிய புள்ளிகள், உயர் அதிகாரிகள் இந்த ஊழல் பின்னணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புபட்டுள்ளனர். அவர்கள் தமது நெருக்கமானவர்களைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறான முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.