இஸ்ரேலுடன் இணைந்து ட்ரம்ப் ஈரானின் தலைமையை அகற்ற முயற்சி
பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ஜனாதிபதி ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானின் தலைமையை அகற்ற முயற்சிக்கிறார். ஒரு அரசாங்கத்தை அகற்றுவதாக இருந்தால், இந்த வன்முறை வழிமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளுக்கு முரணானது என சுவிட்சர்லாந்தும் நோர்வேயும் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது. இவ்வாறான உலக அரசியல் போக்குகள் இலங்கைக்குச் சாதகமானவை அல்ல. ஜனாதிபதி ட்ரம்ப் உலகம் தனது விருப்பப்படி இயங்க வேண்டுமென எதிர்பார்க்கிறார், ஆனால் இது போன்ற ஆழமான பிரச்சினைகள் சிறிய நாடுகளுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும்.
இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment