Header Ads



எரிபொருட்களின் விலைகள் உயர்ந்தது


இன்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது. இதன்படி, 


293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரித்து, அதன் புதிய விலை 317 ரூபாவாகும். 


340 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரித்து, அதன் புதிய விலை 365 ரூபாவாகும். 


281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரித்து, புதிய விலை 303 ரூபாயாகும். 


329 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவால் அதிகரித்து அதன் புதிய விலை 353 ரூபாவாகும். 


மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரித்து அதன் புதிய விலை 195 ரூபா.

No comments

Powered by Blogger.