Header Ads



தியாகிகளை வீழ்த்திய கொலையாளிகள் அதற்கான விலையை விரைவில் செலுத்தியே தீர வேண்டும்

 
ஈரானின் முக்கிய பாதுகாப்புப் படைத் தலைவரான அலி லாரிஜானி படுகொலை  குறித்து மொஜ்தபா கமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ஈரானின் 'தஸ்னிம்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள குறித்த அறிக்கையில், "லாரிஜானி ஒரு அறிவார்ந்த, அர்ப்பணிப்புள்ள மற்றும் ஈரானின் அரசியல் கட்டமைப்பில் மிகவும் மதிக்கப்படக்கூடிய ஒரு ஆளுமை. அவரது மறைவுச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பெற்றுக்கொண்டேன்" 


"இத்தகையதொரு முக்கியத் தலைவரின் படுகொலை, அவர் எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதையும், எதிரிகள் அவர் மீது கொண்டுள்ள வெறுப்பையுமே காட்டுகிறது. இஸ்லாமிய அமைப்பின் அடிவாரத்தில் சிந்தப்படும் இத்தகைய இரத்தம், அந்த மரத்தை மேலும் வலுப்படுத்துமே தவிர வீழ்த்தாது"


"சிந்தப்பட்ட ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு. இந்தத் தியாகிகளை வீழ்த்திய அந்த கொலையாளிகள் அதற்கான விலையை விரைவில் செலுத்தியே தீர வேண்டும்"

No comments

Powered by Blogger.