Header Ads



எரிபொருளை பதுக்க வேண்டாம்


தனது வீட்டில் எரிபொருள் கையிருப்பினை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் குடாஓய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த பெண்ணின் வீட்டில் எரிபொருள் சேகரித்து மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊவா குடாஓய பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த எரிபொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன்போது 95 லீற்றர் பெற்றோல் மற்றும் 78 லீற்றர் டீசல் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் குறித்த பெண் இந்த எரிபொருட்களைச் சேகரித்து மறைத்து வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.