Header Ads



இம்ரான்கானுக்கு பார்வை இழப்பு, ரத்த உறைவு இருப்பதும் கண்டுபிடிப்பு


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்மான் கானுக்கு வலது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இம்ரான் கான், ஊழல் வழக்கில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதுமுதல் அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். தற்போது அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இம்ரான் கானுக்கு ரத்த உறைவு இருப்பது கண்டறியப்ட்டுள்ளது. இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும். ஊசி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவருக்கு வலது கண்ணில் 15% பார்வை மட்டுமே உள்ளது. மற்றபடி அவர் நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்’’ என்று வழக்கறிஞர் சல்மான் சஃப்தார் தெரிவித்துள்ளார்.


இந்த அறிக்கையை அடுத்து, வரும் 16-ம் தேதிக்கு முன்பாக இம்ரான் கானுக்கு விரிவான மருத்துவ பரிசோதனை நடத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், தனது குழந்தைகளுடன் பேச அவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.