புதிய உலகளாவிய கிரிக்கெட் நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும்- பாகிஸ்தான் அழைப்பு
இந்தியாவின் அரசியல் மற்றும் வணிக ரீதியான ஆதிக்கத்தினால் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மிக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, புதிய உலகளாவிய கிரிக்கெட் நிர்வாக அமைப்பை உருவாக்க வேண்டும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அழைப்பு விடுத்துள்ளார்.
"கிரிக்கெட் விளையாட்டின் மாண்பைக் காக்க" புதிய அமைப்பு அவசியம் என்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை, இந்தியாவின் அரசியல் நலன்களுக்கு "பணயக்கைதியாக" (Hostage) இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண தொடர்பான பதற்றங்களுக்கு மத்தியில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
ஒரு புதிய அமைப்பிற்கான கோரிக்கை கிரிக்கெட் விளையாட்டில் பிளவுகளை ஆழப்படுத்தும் என ஒரு தரப்பினரும், தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பின் மீதான ஏமாற்றத்தின் வெளிப்பாடு இது என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment