Header Ads



குர்ஆன் கூறும் பாடம் ..!


நாம் சிறந்தது என ஒன்றை நினைப்போம், ஆனால்  அது நமக்கு தீமையாக இருக்கலாம். நாம் தீமையாக ஒன்றை வெறுக்கலாம்  ஆனால் அது நமக்கு நன்மையாக இருக்கலாம். (நபிமொழி)


உதாரணமாக அஜீத் பவார் என்ற மும்பை அரசியல்வாதி விமான விபத்தில் மரணமடைந்து விட்டார். இவர் கடந்த இரண்டு வருடங்கள் முன்பாக ஒரு ட்வீட் போட்டிருந்தார் அதில் "விமானத்தை அல்லது ஹெலிகாப்டரை மிகவும் லாகவமாக தரையிறக்கினால் அதன் விமானி பெண் என்று அறிக" என்ற அர்த்தத்தில் அந்த ட்வீட் இருந்தது.


அவர் விமான விபத்தில் மரணமடைந்த விமானத்தின் முதல் அதிகாரியாக விமான ஓட்டியாக விமானத்தை இயக்கியவர் ஒரு பெண். அவரின் பெயர் சாம்பவி பதக். இளமையான மிகவும் திறமை வாய்ந்த விமான ஓட்டி. இந்த விபத்தில் அந்த பெண் விமானியும் மரணமடைந்தார் என்பது துயரமானது.


குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில், அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் முன்கூட்டியே அறிய முடியாத, மறைவான (காயிப்) 5 முக்கிய விஷயங்கள் உள்ளன. 


இவை மனிதர்களின் அறிவுக்கு எட்டாதவை: 


1️⃣ உலக முடிவு நேரம் (கியாமத்): உலகம் எப்போது அழியும் என்பது.


2️⃣ மழை எப்போது, எங்கே பொழியும்: மழை பொழிவதைப் பற்றிய சரியான முன்னறிவிப்பு.


3️⃣ கருவறையில் உருவாக இருப்பவை : கர்ப்பத்தில் இருப்பது ஆணா, பெண்ணா அல்லது அது நற்பேறானதா, துர்பேறானதா என்பது.


4️⃣ நாளை நடப்பவை (சம்பாத்தியம்): நாளை ஒருவன் எதைச் சம்பாதிப்பான் அல்லது என்ன நடக்கும் என்பது.


5️⃣ மரணிக்கும் இடம்: ஒருவன் எந்தப் பூமியில் மரணிப்பான் எப்படி மரணிப்பான் என்பது. 


இந்த ஐந்து விஷயங்களும் அல்-குர்ஆன் 31:34-வது வசனத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.


Abdul Wahab

No comments

Powered by Blogger.