Header Ads



அனர்த்த நிவாரண நிதியை பெற்றுக் கொள்வதற்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது - அரசாங்கம்


அனர்த்த நிவாரண நிதியை பெற்றுக் கொள்வதற்கு எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. 


அனர்த்த நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கான படிவத்தில் அரச அதிகாரிகளின் சான்றுப்படுத்தல் மாத்திரமே தேவைப்படுவதாகவும், அதில் அரசியல்வாதிகளின் எவ்வித பரிந்துரைகளும் அவசியப்படாது. இந்த நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் குறைகூறும் ஒருசில தரப்பினரால் இவ்வாறான வதந்திகள் சமூகத்திடையே பரப்பப்படுவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ்  குற்றம் சுமத்தியுள்ளார். 


குறிப்பாக கிராம சேவையாளர்களுக்கான சங்கம் ஒன்றை சேர்ந்த ஒரு சில உத்தியோகத்தர்களும் இது போன்ற பொய் வதந்திகளைப் பகிர்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 


அதன்படி, கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், மற்றும் நிவாரண சேவை அதிகாரி ஆகியோரின் ஒப்புதலுடன், பிரதேச செயலாளர் ஊடாக மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.


நாட்டில் இதுவரை காலம் இல்லாத அளவு, இந்தமுறை அதிகளவான நிவாரண தொகை பெற்றுக் கொடுக்கப்படுவதாகவும் அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.