அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் தயார் நிலையில்
எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மழையுடனான வானிலை அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் நிலவக்கூடிய அலை வடிவான காற்று காரணமாக மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு, கடற்படை வீரர்கள், விமானங்கள் மற்றும் படகுகளைத் தயார் நிலையில் வைக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொள்கிறது என நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.

Post a Comment