Header Ads



அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில், பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள் - ஜனாதிபதி


அபிவிருத்தியின் நன்மைகளை மக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக தமது பொறுப்பை முறையாக நிறைவேற்றுங்கள். அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் இடைப் பொறிமுறையாக அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்பு உள்ளது.


இந்த நிதியாண்டில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் திறைசேரிக்கு மீள் கையளிக்க இடமளிக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, அதன் மூலம் தேவையான அபிவிருத்திப் பணிகள் நடைபெறாததுடன், பணம் விரயமாகும் என்றும், ஒரே திட்டத்திற்கு மீண்டும் மீண்டும் பணம் ஒதுக்குவதால், புதிய திட்டங்களை ஆரம்பிக்க  முடியாத நிலை ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

 

இன்று (14) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இதனைக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.