Header Ads



பிரமிட் திட்டம் தொடர்பில் எச்சரிக்கை


பிரமிட் திட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும் வருமானம் ஈட்டுவதற்காக பிரமிட் திட்டத்தை இயக்கி ஊக்குவித்த தனியார் நிறுவனம் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


"பிரமிட் திட்டம் என்பது தனிநபர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் அல்லது பங்கேற்பாளர்களின் பங்களிப்புகளை அதிகரிப்பதன் மூலம் நன்மைகளை வழங்கும் ஒரு திட்டமாகும்.


அத்தகைய திட்டங்களை வழங்குதல், ஊக்குவித்தல், விளம்பரப்படுத்துதல், நிதியளித்தல் அல்லது இயக்குதல் போன்ற எந்த வகையிலும் உதவிகளை செய்யும் நபர்கள் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட சட்டப்பூர்வ தண்டனைகளுக்கு உட்பட்டவர்கள்.


அத்தகைய வணிகம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது இலங்கை மத்திய வங்கிக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.